வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 13 பேர்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் சீன் பார்ட்டி

Biggboss 8: பிக்பாஸ் வீட்டின் பழைய போட்டியாளர்கள் இன்னும் புது வரவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அது சில சம்பவங்களின் மூலம் வெளிப்படையாக தெரிகிறது.

biggboss-voting
biggboss-voting

அதனாலேயே இந்த வாரம் ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்களில் ஐந்து பேர் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். இது தவிர பழைய போட்டியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 13 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் யார் வெளியேறுவார் என்பதை பற்றி பார்ப்போம்.

தற்போதைய ஓட்டு நிலவரம் படி சௌந்தர்யா தான் 25 சதவீத ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஜெஃப்ரி, தீபக், ஜாக்லின், ரஞ்சித், சத்யா ஆகியோர் உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா.?

மேலும் அடுத்தடுத்த இடங்களில் தர்ஷிகா, ராணவ், சாச்சனா, சிவகுமார், வர்ஷினி, மஞ்சரி, ரியா ஆகியோர் உள்ளனர். இதில் ரியா குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார். அதனால் இவர் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் சீன் போடும் நபராக இவர் இருக்கிறார். அருண் கடந்த வாரம் இதை விஜய் சேதுபதி முன்பு கலாய்த்து காட்டியது முற்றிலும் உண்மைதான். அதே போல் புதுசா ஏதோ செய்கிறேன் என்ற பெயரில் அவர் மொக்கை வாங்கியும் வருகிறார்.

வார இறுதிக்கு இன்னும் சில தினங்கள் இருந்தாலும் இவருக்கான வாக்குகள் கிடைப்பது சந்தேகம்தான். இதனால் கடைசி இடத்தில் இருக்கும் ரியா, மஞ்சரி இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருக்கிறது.

Trending News