ஓடிடி தளத்தில் இந்த வாரம் மொத்தம் நான்கு படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. ரசிகர்களின் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்று மிகப்பெரியபிளாக் பஸ்டர் ஹிட் அடித்த தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படமும் இந்த வாரம் தான் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகிறது.
திருச்சிற்றம்பலம்: தனுஷின் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் ஆன படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோர் நடித்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்தார். இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டது. இந்த நிலையில் சன் நெட்ஒர்க் தங்களுடைய ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட்டில் வரும் 23 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Also Read: ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்.. கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள்
டைரி: பைவ் ஸ்டார் கிரியேஷன் தயாரிப்பில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் டைரி . இந்த படம் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. வழக்கம் போல அருள்நிதியின் ஜானரான த்ரில்லர் கதை களத்தை கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. கொடைக்கானல் மலையின் ஹேர் பின் வளைவில் அடிக்கடி நடைபெறும் கொலைகளின் காரணத்தை கண்டுபுடிக்கும் கதை. இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை ஆஹா தமிழ் வாங்கி இருக்கிறது. வரும் 23 ஆம் தேதி இந்த படம் ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
Also Read: அருள்நிதியின் அமானுஷ்ய திரில்லர் டைரி.. சினிமாபேட்டை விமர்சனம்
பாப்லி பவுன்சர்: பாப்லி பவுன்சர் ஹிந்தி மொழியில் உருவாகி தமன்னா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் பாப்லி பவுன்சர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை சாந்தினி பார் இயக்குகிறார். இந்த படம் ஒரு பெண் பவுன்சர் பற்றின வாழ்க்கை கதையை மைய்யமாக கொண்டது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தேஜாவு: அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த திரைப்படம் தேஜாவு. கதையில் எழுதப்பட்டது போல் நிஜத்தில் நடக்கும் கொலை சம்பவங்களை மைய்யமாக கொண்டது தேஜாவு. இந்த படம் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆனது. ஓரளவுக்கு தியேட்டர் ரெஸ்பான்ஸ் பெற்ற தேஜாவு சிம்பிளி சவுத் என்னும் ஓடிடி தளத்தில் வரும் வாரம் ரிலீஸ் ஆகிறது.
Also Read: பயமுறுத்தும் தேஜாவு எப்படி இருக்கு.? அருள்நிதிக்கு கைகொடுக்குமா இந்த ட்விட்டர் விமர்சனம்