செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.. மீண்டும் தலைவரோடு மோதும் மணிகண்டன்

This Week OTT Release Movies: எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் படங்களை கூட ஆடியன்ஸ் ஓடிடியில் பார்ப்பதை தான் விரும்புகின்றனர். டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பெரிய பெரிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஆடியன்ஸ் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் தான் டிஜிட்டலில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதன்படி ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வரும் 8-ம் தேதி வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்காக லைக்கா காசை தண்ணியாக வாரி இறைத்தது.

Also read: தலைவரே நீங்க இப்படி செய்யலாமா.? அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினிக்கு வந்த பஞ்சாயத்து

ஆனால் படம் வெளியான பிறகு போட்ட காசை கூட எடுக்க முடியாமல் தயாரிப்பு தரப்பு திணறியது. மேலும் விமர்சனங்களும் எதிர்மறையாக தான் இருந்தது. அதனால் டிஜிட்டலில் லால் சலாம் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு போட்டியாக தியேட்டரில் வெளியான லவ்வர் படமும் வரும் 8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது.

மணிகண்டன் நடிப்பில் காதலர் தின ஸ்பெஷலாக வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் ஓடிடியிலும் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான மேரி கிறிஸ்துமஸ் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

மேலும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்திய ஹனுமான் ஜீ 5 தளத்தில் வரும் மார்ச் 8 வெளியாகிறது. அடுத்ததாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ள மகாராணி சீசன் 3 தொடர் சோனி லைவ்வில் 8ம் தேதி வெளியாக உள்ளது. அரசியல் சம்பந்தப்பட்ட கதைக்களமான இந்த தொடருக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது.

Also read: அடுத்த பயோபிக் படத்திற்கு ரெடியான ரஜினி மகள்.. தோனி பட வெற்றியால் ஐஸ்வர்யாவின் பேராசை

Trending News