ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

லாஸ்லியா, ஹரி பாஸ்கர், ரயான் கூட்டணியின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்.. படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Mr House Keeping Movie review: நேற்று குடும்பஸ்தன், வல்லான் உட்பட பல படங்கள் திரையரங்கில் வெளியானது. அதில் பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் யூடியூபர் கூட்டணியில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் வெளியாகி இருக்கிறது.

அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஹரிபாஸ்கர், ரயான், லாஸ்லியா நடித்துள்ள இப்படத்திற்கு தற்போது பாசிட்டி ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. அதன் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம்.

கல்லூரியில் லாஸ்லியாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஹரிபாஸ்கர். ஆனால் அவரோ இந்த காதலை ரிஜெக்ட் செய்கிறார். இதனால் கடுப்பாகும் ஹீரோ லாஸ்லியாவிடம் வேறு பொண்ணை காதலித்து வெற்றி பெறுவேன் என சவால் விடுகிறார்.

அதன்படி ஒரு பெண்ணை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் அதுவும் நிறைவேறாத நிலையில் விரக்தியின் உச்சிக்கு சென்று விடுகிறார்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஹீரோ ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு செல்கிறார். அப்படி ஒரு வீட்டுக்கு செல்லும்போது லாஸ்லியாவை சந்திக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் முழு விமர்சனம்

யூடியூப் சேனலில் எதுக்கு என்ற வார்த்தை மூலம் பிரபலமான ஹரிபாஸ்கர் ஹீரோவாக முன்னேறியுள்ளார். அதேபோல் லாஸ்லியாவுக்கு கடந்த சில படங்கள் சரியாக போகவில்லை.

ஆனால் இப்படம் அவருக்கு சரியாக அமைந்திருக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். ஆனாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டும்.

அதேபோல் பிக் பாஸ் ரயான், இளவரசு, ஷாரா ஆகிய கதாபாத்திரங்களின் நடிப்பும் சிறப்பு. இப்படி படத்தில் சென்டிமென்ட் கலகலப்பு அனைத்தும் பிளஸ் ஆக அமைந்துள்ளது.

ஆனால் அதிகபட்ச நீளம் சோர்வை தருகிறது. இருந்தாலும் இந்த ஹவுஸ் கீப்பிங் ஓகே ரகமாகத்தான் இருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5

Trending News