புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Kavin: இந்த வாரம் ரிலீசான 3 படங்களின் முதல் நாள் வசூல்.. ஜெயித்தது கவினா, அர்ஜுன் தாஸா.?

This Week Released Movies: மே மாத தொடக்கத்திலேயே கோலிவுட்டுக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

அதை அடுத்து கவின் நடிப்பில் நேற்று ஸ்டார் வெளியானது. இதற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார் போல் தியேட்டர்களில் இப்போது ரசிகர்களின் கூட்டமும் அலைமோதிக்கொண்டிருக்கிறது.

மேலும் அர்ஜுன் தாசின் ரசவாதி, அமீரின் உயிர் தமிழுக்கு ஆகிய படங்களும் நேற்றைய தினத்தில் வெளியானது. இதில் ஸ்டார் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

அதனாலேயே இப்போது இந்த மூன்று படங்களில் எது முதல் நாள் கலெக்ஷனை தட்டி தூக்கியது என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது. அதன்படி ஸ்டார் முதல் நாளில் 3.4 கோடி வசூலை பெற்றுள்ளது.

இதன் டிக்கெட் முன்பதிவே ஒரு கோடி அளவுக்கு கலெக்ஷனை வாரி குவித்தது. அதை தொடர்ந்து நேற்று நல்ல லாபம் கிடைத்த நிலையில் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் இந்த வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ரசவாதி முதல் நாளில் 3 லட்ச ரூபாயை வசூலித்திருக்கிறது. அதேபோல் அமீரின் உயிர் தமிழுக்கு படம் 2 லட்சத்தை வசூலித்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது இந்த ரேசில் கவின் தான் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் ரசவாதி படத்திற்கு விமர்சன ரீதியான பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.

Trending News