ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டிஆர்பி யில் அடித்து நொறுக்கிய சன் டிவி.. விட்டுக்கொடுக்காத விஜய் டிவி!

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்து கணித்து விடலாம். அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சன் டிவி டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் முதலிடத்தை கயல் சீரியல் பிடித்திருக்கிறது.

கடந்த வாரம் சுந்தரி சீரியல் உடன் போட்டி போட்டுக்கொண்டு பின்தங்கிய கயல் சீரியல் இந்த வாரம் அடித்துப்பிடித்து முதலிடத்தைப் பிடித்து விட்டது. அத்துடன் சுந்தரி சீரியல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு சன் டிவியின் ரொமான்டிக் சீரியல் ஆன ரோஜா சீரியல் டாப் இடத்தில் இருந்து கொண்டிருந்த நிலையில் கயல் மற்றும் சுந்தரி சீரியலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மூன்றாம் இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது.

4-வது இடம் வானத்தைப்போல சீரியலுக்கும், ஐந்தாமிடம் கண்ணான கண்ணே சீரியலுக்கும் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அன்பே வா, அபியும் நானும், பூவே உனக்காக போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றிருக்கிறது. அத்துடன் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா, அருவி, பாண்டவர் இல்லம் போன்ற சீரியல்களும் தாலாட்டு, 90களில் ஹிட் அடித்த மெட்டிஒலி, சித்தி2, திருமகள், மகராசி ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

இவ்வாறு சன் டிவி டிஆர்பி ரேட்டிங் க்கு போட்டியாக விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற டாப் சீரியல்களை பின்னுக்குத்தள்ளி பாக்கியலட்சுமி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இரண்டாவது இடம் பாரதிகண்ணம்மாவிற்கும் மூன்றாவது இடம் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

அதைப்போன்று ஐந்தாவது இடம் ராஜா ராணி2-க்கும், 6வது இடம் தமிழும் சரஸ்வதிக்கும், ஏழாவது இடம் மௌன ராகத்திற்கும் கிடைத்திருக்கிறது. அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட ஈரமான ரோஜாவே 2 சீரியல் சீக்கிரம் ரசிகர்களின் மனதை கவர்ந்ததால் டிஆர்பி ரேட்டிங்கில் 7வது இடத்தைப் பிடித்து தூள் கிளப்பி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து 8-வது இடம் தென்றல் வந்து என்னைத் தொடும், முத்தழகு, நம்ம வீட்டு பொண்ணு, நாம் இருவர் நமக்கு இருவர் ,காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், வேலைக்காரன், செந்தூரப்பூவே, வைதேகி காத்திருந்தாள் ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

Trending News