ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டாப் 3 இடத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட சன் டிவியின் முக்கியமான சீரியல்.. டிஆர்பி-யில் மாஸ் காட்டிய சிங்கப் பெண்!

சன் டிவியின் இந்த வார டிஆர்பி ரேட்டிங் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட கயல் சீரியல் முதலிடத்தை நீண்ட வாரமாகவே தக்க வைத்துக் கொள்கிறது.

இந்த சீரியல் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்த சைத்ரா இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். இதில் இவர்களின் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க்கவுட் ஆகி உள்ளது.

ஆகையால் கயல் சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் இஷ்டமான சீரியலாக மாறி டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து சுந்தரி சீரியலுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் இவ்வளவு நாள் கிராமத்துப் பெண்ணாக இருந்த சுந்தரி, கணவனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புரட்சிகர பெண்ணாக மாறியுள்ளார்.

இதனால் இந்த சீரியலுக்கு கூடுதல் விருவிருப்பு ஏற்பட்டு, ரசிகர்களை ஒவ்வொருநாளும் பார்க்கத் தூண்டுவதால் டிஆர்பி-யில் முன்னிலை வகிக்கிறது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இடம் அண்ணன்-தங்கை பாசப்பிணைப்பை வெளிக்காட்டும் வானத்தைப்போல சீரியலுக்கு, 4-வது இடம் ரொமான்டிக் சீரியல் ஆனா ரோஜா சீரியல் இருக்கும் கிடைத்துள்ளது.

பொதுவாக ரோஜா சீரியல் டாப் 3 இடத்திற்குள் டி ஆர் பி ரேட்டிங்கில் வருவது வழக்கம். ஆனால் தற்போது சுந்தரி சீரியலால் ரோஜா சீரியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அத்துடன் ஐந்தாவது இடம் கண்ணான கண்ணே சீரியலுக்கும், ஆறாவது இடம் அம்மா-மகள் பாசத்தை வெளிக்காட்டும் அபியும் நானும் சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

ஏழாவது இடம் அன்பே வா சீரியலுக்கும் தாலாட்டு, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அன்பே வா, மெட்டிஒலி, திருமகள், சித்தி 2, மகராசி ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தையும் டிஆர்பி ரேட்டிங்கில் பெற்றிருக்கிறது.

Trending News