புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 8 படங்கள்.. சொன்ன மாதிரியே டிஜிட்டலுக்கு வரும் இந்தியன் தாத்தா

This Week Theater OTT Release Movies: கடந்த வாரம் போட், மழை பிடிக்காத மனிதன், ஜமா, பேச்சி உள்ளிட்ட பல படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. அதை தொடர்ந்து இந்த வாரம் திரையரங்கில் மூன்று படங்கள் வெளியாக இருக்கிறது.

அதில் அடுத்த வாரம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருந்த பிரசாந்தின் அந்தகன் ஒரு வாரம் முன்னதாக வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகிறது. தங்கலான், டிமான்டி காலனி 2, ரகுதாத்தா உள்ளிட்ட படங்கள் 15ஆம் தேதியை குறி வைத்துள்ளன.

இதனாலேயே பிரசாந்த் எதற்கு வம்பு என 9ம் தேதி களமிறங்க தயாராகி இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக எஸ்தர் அனில்,, கௌரவ் கலை உள்ளிட்டோர் நடிப்பில் ஹலிதா சமீம் இயக்கியிருக்கும் மின்மினி ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகிறது.

டிஜிட்டலுக்கு வரும் இந்தியன் தாத்தா

மேலும் எதிர்நீச்சல் புகழ் வேலராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் வீராயி மக்கள் 9ம் தேதி வெளியாகிறது. படம் மூலம் இரண்டு குணசேகரனும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக ஓடிடியை பொருத்தவரையில் தற்போதைய நிலவரப்படி 5 படங்கள் வெளியாக இருக்கிறது. இதில் கடந்த மாதம் திரைக்கு வந்த இந்தியன் 2 வரும் 9ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் 28 நாளில் டிஜிட்டலுக்கு வருவது படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனத்தை காட்டுகிறது.

இதற்கு அடுத்ததாக மம்முட்டி நடிப்பில் வெளிவந்த டர்போ சோனி லைவ் தளத்தில் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதைத் தொடர்ந்து சிம்ப்ளி சவுத் தளத்தில் மலையாள படமான நடன்ன சம்பவம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் லைப் ஹில் கயி ஒன்பதாம் தேதி வெளியாகிறது. அதேபோல் கனா காணும் காலங்கள் சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இப்படியாக பல படங்கள் இந்த வார இறுதியில் கலக்க வருகிறது.

இதில் அமிதாப்பச்சன், கமல், பிரபாஸ் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த கல்கி படமும் டிஜிட்டலுக்கு வருகிறது. இதன் ஹிந்தி மொழியாக்கம் நெட்பிளிக்ஸ் தளத்திலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் அமேசான் ப்ரைம் தளத்திலும் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த வாரம் தியேட்டர் டிஜிட்டலுக்கு வரும் படங்கள்

Trending News