This Week Theater OTT Release:கடந்த வாரம் தியேட்டரில் இந்தியன் 2, டீன்ஸ் ஆகிய படங்கள் வெளியானது. இதில் பிரம்மாண்ட இயக்குனரின் படைப்பு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் சோர்வடைந்துள்ளது. அதேபோல் ஓடிடியில் வெளியான மகாராஜா தியேட்டரை போலவே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அதைத்தொடர்ந்து இந்த வாரம் தமிழில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் ட்விஸ்ட்டர்ஸ் என்ற ஹாலிவுட் படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. ஹிந்தியில் விக்கி கௌசல், திரிப்தி டிம்ரி நடித்த பேட் நியூஸ் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
அடுத்த வாரம் தனுஷின் ராயன் வெளியாக இருக்கிறது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்ததாக ஓடிடி தளத்தை பொருத்தவரையில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி 160 கோடிகளை வசூலித்த ஆடு ஜீவிதம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 19ஆம் தேதி வெளியாகிறது.
டிஜிட்டலுக்கு வரும் ஆடு ஜீவிதம்
மேலும் நீட் தேர்வின் அவல நிலையை மையப்படுத்தி வெளிவந்த அஞ்சாமை 19ஆம் தேதி சிம்ப்ளி சவுத் தளத்தில் வெளியாகிறது. விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது.
அடுத்ததாக மலையாளத்தில் வெளிவந்த வெப் தொடரான நாகேந்திரனின் தேன்நிலவு வரும் வெள்ளிக்கிழமை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. அதை தொடர்ந்து அமேசான் ப்ரைம் தளத்தில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான காடுவெட்டி ரிலீஸ் ஆகிறது.
இப்படியாக இந்த வாரம் படங்கள் வெளிவரும் நிலையில் அடுத்த வார வெள்ளிக்கிழமை யோகி பாபுவின் சட்னி சாம்பார் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. மேலும் ஆகஸ்ட் மாதத்தை குறி வைத்து தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் பல படங்கள் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
தியேட்டர் ஓடிடியை கலக்க வரும் படங்கள்
- இந்தியன் 2க்கு போட்டியாக வந்த டீன்ஸ்
- இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாக இருக்கும் 5 படங்கள்
- இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்