வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாக இருக்கும் 8 படங்கள்.. டிஜிட்டலுக்கு வரும் விஷாலின் ரத்னம்

This Week OTT-Theater Movies: கடந்த வாரம் சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு வெளியானது. நீண்ட நாளைக்கு பிறகு அவருடைய காமெடி அலப்பறை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

அதை அடுத்து ராமராஜனின் சாமானியன் இன்று வெளியாகி உள்ளது. நாளை தியேட்டரில் ஹிப் ஹாப் ஆதியின் பிடி சார், சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் நடித்துள்ள தண்டுபாளையம், பூமரக்காத்து, பகலறியான் ஆகிய படங்கள் வெளியாகின்றது.

பிடி சார்
தண்டுபாளையம்
பூமரக்காத்து
சாமானியன்
பகலறியான்

இதில் பிடி சார் படத்தின் டிரைலர் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் இதன் பிரீமியர் நிகழ்ச்சியும் பத்திரிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது.

ஓடிடிக்கு வந்த விஷாலின் ரத்னம்

அதனால் இப்படம் வசூலில் லாபம் அள்ளுமா என்பது நாளை தெரிந்துவிடும். அடுத்ததாக அமேசான் ப்ரைம் தளத்தில் விஷாலின் ரத்னம் வெளியாகிறது. ஹரி இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த எதிர்பார்ப்பு காற்று போன பலூன் போல் ஆகிவிட்டது. இதனால் ரத்னம் வசூலிலும் மொக்கை வாங்கியது. அந்த வகையில் ஓடிடி தளத்திலாவது இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் வல்லவன் வகுத்ததடா படம் சிம்ப்ளி சவுத் மற்றும் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது. அடுத்ததாக கயல் ஆனந்தியின் வைட் ரோஸ் படம் டென்ட் கொட்டா தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ரத்னம் – அமேசான்
வல்லவன் வகுத்ததடா – சிம்ப்ளி சவுத், ஆஹா தமிழ்
வைட் ரோஸ் – டென்ட் கொட்டா

தியேட்டர்களை ஓரம் கட்டி கொடி கட்டி பறக்கும் ஓடிடி

Trending News