This Week Theater, OTT Release: கடந்த வாரம் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல் கூட்டணியில் கல்கி வெளியானது. நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வரும் இப்படம் வெளியான 5 நாட்களிலேயே 550 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த வாரமும் இந்த வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இந்த வாரம் வெளியாகவில்லை புதுமுகங்கள் நடிப்பில் எமகாதகன் மற்றும் பூமரக்காத்து ஆகிய சிறு பட்ஜெட் படங்கள் தான் தியேட்டர்களில் வெளியாகிறது.
அதையடுத்து பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த கருடன் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சூரி, சமுத்திரகனி, உன்னி முகுந்தன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கியிருந்த இப்படம் கடந்த மே 31 தியேட்டரில் வெளியானது.
20 கோடி பட்ஜெட்டில் 50 கோடி வரை வசூலித்த இப்படத்தில் சூரியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது இப்படம் அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய தளங்களில் நாளை வெளியாகிறது.
டிஜிட்டலுக்கு வரும் கருடன்
அதேபோல் டென்ட்கொட்டா தளத்திலும் கருடன் இந்த வார இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. அடுத்ததாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன் நடிப்பில் ஜூன் 7ம் தேதி வெளியான படம் தான் ஹரா.
இப்படம் வரும் 5ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதே தளத்தில் தெலுங்கு படமான மார்க்கெட் மகாலட்சுமி 4ம் தேதி வெளியாகிறது. மேலும் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் சட்னி சாம்பார் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் வர இருக்கிறது.
தற்போது இதன் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில் நிச்சயம் இது நல்ல வரவேற்பை பெறும் என தெரிகிறது. இப்படியாக இந்த வாரம் பல படங்கள் வரும் நிலையில் அடுத்த வாரம் உலக நாயகனின் இந்தியன் 2 உலக அளவில் வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வாரம் தியேட்டர் ஓடிடியை கலக்கும் படங்கள்
- விஜய் சேதுபதியின் மகாராஜா OTT ரிலீஸ்
- ஜூன் 14-ல் OTT-யில் வெளிவரும் தரமான 14 படங்கள்
- இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்