செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசைக்க முடியாத அசுரனாக மாறிய ஒரே சேனல்

ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சேனலை விரும்பி பார்க்கின்றனர் என்பதை அடிப்படையாக வைத்து வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் பிரபல சேனல் ஒன்று தொடர்ந்து டாப் 6 இடங்களை பல மாதங்களாகவே ஆக்கிரமித்து அசைக்க முடியாத அசுரனாக மாறி இருக்கிறது.

இதில் 10-வது இடத்தை விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெற்றுள்ளது. 9-வது இடம் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலுக்கும், 8-வது இடம் சன் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கும், 7-வது இடம் புதிதாக துவங்கப்பட்ட பாரதிகண்ணம்மா 2 சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

Also Read: குக் வித் கோமாளிலிருந்து துரத்தி விடப்பட்ட ஓட்டேரி.. படமே ஓடலனாலும் அடைக்கலம் கொடுத்த ஹீரோ

இனியா: வாய் பேச முடியாத அக்காவின் திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருக்கும் இனியா சீரியல் சமீபத்தில் துவங்கப்பட்டாலும் வெகு சீக்கிரமே சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் 6-வது இடத்தை பிடித்துள்ளது

எதிர்நீச்சல்: பெண்களை அடிமைகளாக நினைக்கும் ஆணாதிக்கத்தை தகர்த்தெறியும் நோக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. இதனால் அதிரடி திருப்பங்கள் நிறைந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் 5-வது இடத்தைப் பெற்றுள்ளது.

கண்ணான கண்ணே: தந்தையிடம் கிடைக்காத பாசத்தை கணவரிடம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கதாநாயகியின் கதையான கண்ணான கண்ணே சீரியலுக்கு இந்த வாரம் 4-வது இடம் கிடைத்துள்ளது

Also Read: ரொம்ப தெளிவா உருட்டிய அபுயூஸ் அசீம்.. கொடுத்த வாக்கில் இருந்து பின் வாங்கிய டைட்டில் வின்னர்

சுந்தரி: தன்னைத் தூக்கி எறிந்த கணவரை திரும்பிக்கூட பார்க்க கூடாது என வைராக்கியத்துடன் இருக்கும் சுந்தரியின் போராட்டமான வாழ்க்கை கதை பலரையும் கவர்ந்துள்ளது இதனால் இந்த சீரியலுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

வானத்தைப்போல:அண்ணன் தங்கையின் பாச போராட்டமாக இருக்கும் வானத்தைத் போல சீரியலுக்கு என்று ஏகப்பட்ட சின்னத்திரை ரசிகர்கள் உள்ளனர் இதனால் இந்த சீரியல் இந்த வாரம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது

கயல்: நீண்ட நாட்களாக இருக்கும் தோழியை காதலிக்கும் கதாநாயகனின் காதல் கதையான இந்த சீரியலில், கயல் தன்னுடைய குடும்பத்திற்காக படாத பாடு படுகிறார். இதனால் அதிரடி திறப்புங்கள் அரங்கேறும் கையில் சீரியல் இந்த வாரம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

Also Read: சிகரம் தொட்ட சிவகார்த்திகேயன்.. தனுஷுக்கு முன்பே சிவாவை அடையாளம் கண்ட நடிப்பு அரக்கன்

இதுதான் இந்த வார டிஆர்பி-யின் டாப் 10 இடத்தை பிடித்து சீரியல்களாகும் அதிலும் கடந்த பல மாதங்களாகவே முதல் ஆறு இடத்தையும் சன் டிவி சீரியல்கள் தான் பெற்று அசைக்க முடியாத அசுரனாக மாறி உள்ளது.

Trending News