வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டிஆர்பி-யில் ரணகளம் செய்யும் டாப் 10 சீரியல்கள்.. யம்மாடியோ! முதல் 6 இடத்தை ஆக்கிரமித்த ஒரே சேனல்

TRP Ratings List: சின்னத்திரை ரசிகர்கள் அனுதினமும் எந்த சீரியலை விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியாகி உள்ளது. அதிலும் கடந்த சில மாதங்களாகவே முதல் 6 இடங்களை ஒரே சேனல் தான் பிடித்து மற்ற சேனல்களுக்கு கடும் போட்டியாக இருக்கிறது.

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் ரணகளம் செய்த 10 சீரியல்களின் லிஸ்ட்டை பற்றி பார்ப்போம். 10-வது இடத்தில் சன் டிவியின் அன்பே வா சீரியலும், 9-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், 8-வது இடத்தில் புத்தம் புது சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இருக்கிறது.

Also Read: ஒரே வருடத்தில் கணவனை இழந்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.. மரண பயத்தை காட்டிய காரணம்

இதன் தொடர்ச்சியாக முதல் ஆறு இடத்தையும் சன் டிவியின் சீரியல்கள் தான் பிடித்திருக்கிறது. அதில் 6-வது இடத்தில் சில மாதங்களுக்கு முன்பே துவங்கிய இனியா சீரியல் இருக்கிறது. அதேபோலவே 5-வது இடத்தில் செம்பருத்தி சீரியலின் கதாநாயகி ஷபானா நடித்துக் கொண்டிருக்கும் Mr. மனைவி என்ற சீரியல் பிடித்துள்ளது.

இந்த சீரியலும் சில மாதத்திற்கு முன்புதான் துவங்கப்பட்டது. அதேபோலவே அண்ணன் தங்கையின் பாசத்தை அழகாக காண்பித்துக் கொண்டிருக்கும் சன் டிவியின் வானத்தைப் போல சீரியல் 4-வது இடத்தை பிடித்துள்ளது. அதிரடியான கதைக்களத்தை கொண்ட சுந்தரி சீரியல் 3-வது இடத்தில் உள்ளது.

Also Read: நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன்.. அடேங்கப்பா ஆணாதிக்கத்திற்கு ஜாஸ்தி தான்

மேலும் டிஆர்பி-யில் பிச்சு உதறி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. இதில் குணசேகரனின் வில்லத்தனத்திற்காகவும் நக்கல் நையாண்டி பேச்சைக் கேட்பதற்காகவே இந்த சீரியலை அனுதினமும் தவறாமல் பார்த்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலுக்கு என்று ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.

அதுவும் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்துவுக்கு என்று ஏகப்பட்ட ஃபேன்ஸ் இருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக முதல் இடத்தில் கயல் சீரியல் தான் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. இந்த சீரியல் துவங்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களை கவர்ந்து அவர்களின் ஃபேவரிட் சீரியலாகவே மாறிவிட்டது.

Also Read: குடும்ப மானத்தை கூறு போட்டு விற்கும் மருமகள்கள்.. வீட்டுக்குள்ள சேர்த்ததே தப்பு என நினைக்கும் மூர்த்தி

இதில் நண்பர்களாக இருக்கக்கூடியவர்கள் காதலர்களாக மாறி எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று, ஒவ்வொரு நாளும் பார்ப்பவர்களை ஏங்க வைக்கிறது. ஆகையால் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தையும் சன் டிவி தான் பிடித்து மற்ற சேனல்களுக்கு எல்லாம் தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை அடுத்த வாரத்திலாவது மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News