சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. டாப் 10 இடத்திற்கு மல்லுக்கட்டிய பிரபல சேனல்கள்

சின்னத்திரை ரசிகர்கள் அனுதினமும் தவறாமல் பார்க்கக்கூடிய சீரியல் என்ன என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் கடந்த சில மாதங்களாக மற்ற சேனல்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்த ஜீ தமிழ் ரேஸிலிருந்து விலகி விட்டது.

ஒரு வழியாக இப்போதுதான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கார்த்திகை தீபம் என்று சீரியல் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இடம் பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கும் இப்போது வழியில்லாமல் போய் வந்துவிட்டது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் எந்த சீரியலும் இந்த வாரம் லிஸ்டில் இடம்பெறவில்லை. சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் டாப் 10 இடத்தை முட்டி மோதி பிடித்திருக்கிறது.

அதிலும் விஜய் டிவியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட சிறகடிக்க ஆசை என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால், இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் சீரியலாகவே மாறிவிட்டது. இதனால் டாப் 10 இடத்தில் 10-வது இடம் சிறக்கடிக்க ஆசை சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து கூட்டு குடும்பமாக வாழ்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது சிதைந்து சின்னா பின்னமாக கிடக்கிறது. இந்த சீரியலுக்கு இந்த வாரம் 9-வது இடம் கிடைத்துள்ளது.

Also Read: ராதிகா இல்லனா இந்த 5 படமும் ஒண்ணுமே இல்லை.. தாலியை வைத்தே மிரட்டிய சுந்தராம்பாள்

தொடர்ச்சியாக பாக்கியலட்சுமி சீரியலுக்கு 8-வது இடத்தில் உள்ளது. மேலும் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலுக்கு 7-வது இடமும், அதே சன் டிவியின் மிஸ்டர் மனைவி என்ற புத்தம் புது சீரியலுக்கு 6-வது இடமும் கிடைத்துள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் அனுதினமும் பரபரப்பை கூட்டும் எதிர்நீச்சல் சீரியலுக்கு 5-ம் இடம் கிடைத்திருக்கிறது. துவங்கப்பட்ட சில மாதத்திலேயே டாப் 10 லிஸ்டில் ஐந்தாவது இடம் கிடைத்திருப்பது எதிர்நீச்சல் சீரியல் குழுவினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்ல சமீபத்தில் துவங்கப்பட்ட சன் டிவியின் இனியா சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் இனியா டிஆர்பி-யில் 4ம் இடத்தை பெற்றுள்ளது. மேலும் 3-வது இடம் பெரும் பரபரப்புடன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சுந்தரி சீரியலுக்கும் அண்ணன் தங்கை பாசம் மட்டுமல்ல, ரொமான்ஸிலும் அடித்து நொறுக்கும் வானத்தைப் போல சீரியலுக்கு 2-வது இடமும் கிடைத்திருக்கிறது.

Also Read: படுக்கையறை காட்சிகளை வைத்து டிஆர்பியை ஏற்றும் விஜய் டிவி.. அக்கப்போரை கூட்டும் மட்டமான சீரியல்

சமீப காலமாகவே முதலிடம் எனக்குத்தான் என சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் கயலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் இடம்பெறும் காட்சிகள் வெள்ளி திரைக்கு நிகராக இருப்பதால் அனுதினமும் இந்த சீரியலை தவறாமல் பார்க்க வேண்டும் என்ற வெறியுடன் சரியான நேரத்திற்கு தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து அமோக ஆதரவை ரசிகர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் முதல் 8 இடங்களையும் சன் டிவி தான் பிடித்திருப்பதால், எப்படியாவது முதல் ஐந்து இடத்தில் வரவேண்டும் என விஜய் டிவி பல திட்டத்தை போட்டு இருக்கிறது. அதிலும் எஸ்ஏசி- ராதிகா கூட்டணியில் விரைவில் துவங்க இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலை வைத்து தான் டிஆர்பி-யில் ஆட்டம் காட்டப் போகிறார்கள். அந்த சீரியல் மட்டும் துவங்கி விட்டால் நிச்சயம் டிஆர்பி-யில் ஏகப்பட்ட அதிரடி திருப்பங்கள் நிகழும்.

Also Read: டிஆர்பி-யில் தெறிக்கவிடும் முதல் 5 சீரியல்கள்.. சன் டிவியை தூக்கிவிடும் குணசேகரன்

Trending News