This Week OTT Release Movies: ஓடிடி பிரபலமான பிறகு பலரும் இதில் தான் தங்களுக்கு பிடித்த படங்களை பார்த்து வருகின்றனர். வாரம் முழுவதும் வேலை பார்த்து டென்சனோடு இருப்பவர்கள் சனி ஞாயிறை ஓடிடி ரிலீஸ் படங்களோடு என்ஜாய் செய்கின்றனர்.
கடந்த வாரம் வெளிவந்த மகாராஜா இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதை தொடர்ந்து இந்த வாரம் எட்டு படங்கள் வெளியாகிறது. அந்த வரிசையில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்து 150 கோடிக்கு மேல் வசூலித்த ஆடு ஜீவிதம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
அடுத்ததாக நாசர் நடிப்பில் வெளியான தி அக்காலி படத்தை ஆகா தமிழ் தளத்தில் கண்டு களிக்கலாம். மேலும் விதார்த் நடிப்பில் வெளியான லாந்தர் மற்றும் அஞ்சாமை ஆகிய படங்கள் சிம்ப்ளி சவுத் தளத்தில் உள்ளது.
ட்ரெண்டாகும் ஆடு ஜீவிதம்
அதைத்தொடர்ந்து ரயில் டென்ட் கொட்டா தளத்திலும் மலையாள வெப் சீரிசான நாகேந்திரனின் ஹனிமூன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகி உள்ளது. அதேபோல் ஆர் கே சுரேஷ் நடிப்பில் வெளிவந்த காடுவெட்டி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
மேலும் ஸ்வீட் ஹோம் சீசன் 3 வெப் சீரிஸ் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இப்படியாக இந்த எட்டு படங்களும் ஓடிடி ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களும் வெளியாகி உள்ளது. இதில் ஆடு ஜீவிதம் தான் தற்போது நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது. அதேபோல் பகத் பாசிலின் ஆவேசம் படம் தமிழ் டப்பிங்கில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வார இறுதியை மகிழ்விக்க வெளியான படங்கள்
- ஓடிடி பக்கமே வராத 5 படங்கள்
- இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாக இருக்கும் 5 படங்கள்
- அடுத்த 100 நாளுக்கு அதிக எதிர்பார்ப்பை கிளப்பி வெளிவர உள்ள 6 படங்கள்