சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

உறுதியான டாப் 5 போட்டியாளர்கள்.. குக் வித் கோமாளி 4ல் இந்த வாரம் வெளியேறிய பிரபலம்

விஜய் டிவியில் அதிக டிஆர்பி பெறும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. அதாவது சமையல் போட்டியாளர்களுடன் இணைந்து கலாட்டா செய்வது தான் இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல். கடந்த மூன்று சீசன்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் இப்போது நாலாவது சீசனில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

ஆனால் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சற்று மந்தமாக தான் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இன்னும் ஓரிரு வாரங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவு பகுதியை எட்ட இருக்கிறது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இன்று பிரபலம் ஒருவர் எலிமினேட் ஆகி சென்றுள்ளார்.

Also Read : விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட புகழ்.. குக் வித் கோமாளியால் ஏற்பட்ட சங்கடம்

இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதாவது ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இப்போது ஆறு போட்டியாளர்கள் போட்டியாளர்கள் உள்ளனர். இதில் வெளிநாட்டு நடிகையாக களம் இறங்கி இருந்தார் ஆண்ட்ரியன். இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான இருக்கிறார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆண்ட்ரியன் இந்த வாரம் எலிமினேட்டாகி உள்ளார்.

Also Read : இந்த வாரம் குக் வித் கோமாளியில் வெளியேறும் நபர் இவர் தான்.. சூடு பிடிக்கும் டிக்கெட் டு பினாலே ரவுண்டு

இவருடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் கலகலப்பான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்போது இவர் குக் வித் கோமாளி சீசன் 4 இல் இருந்து வெளியேறுவது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும் வையல் கார்டு சுற்றில் மீண்டும் வந்த வெற்றி பெற்று பைனல் லிஸ்டில் பங்கு பெற வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

உறுதியான டாப் 5 லிஸ்டில் சிவாங்கி, ஸ்ருஷ்டி, மைன் கோபி, விசித்ரா மற்றும் கிரண் ஆகியோர் உள்ளனர். இப்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நிகழ்ச்சி போய்க் கொண்டிருப்பதால் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குக் வித் சீசன் 4 டைட்டில் வின்னர் பட்டத்தை யார் வெல்கிறார் என்ற எதிர்பார்ப்பும் கூடுதலாக இருக்கிறது.

Also Read : திறமை முக்கியமில்லை, டிஆர்பி தான் முக்கியம்.. விஜய் டிவி என் வாழ்க்கையே அழிச்சுட்டாங்க புலம்பும் பிரபலம்

Trending News