வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த டாப் 5 சீரியல்கள்.. புதுசாக உள்ளே நுழைந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு

Sun Tv Serial TRP Rating: ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியலுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்த்து வருகிறார்கள் என்பதை டிஆர்பி ரேட்டிங் இன் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த டாப் 5 சீரியல்கள் எதுவென்று தற்போது பார்க்கலாம்.

கயல்: கயல் மற்றும் எழிலுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தி எழிலிடமிருந்து கயலைப் பிரித்துக் காட்டுவேன் என்று சிவசங்கரி கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். அந்த வகையில் கயல் குடும்பத்திற்கு மறைமுகமாக ஏகப்பட்ட சிக்கல்களை கொடுத்து கயலை பழி வாங்குகிறார். இருந்தாலும் எல்லா பிரச்சினையும் நான் சரி செய்து எழிலுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வேன் என்று கயல் சபதம் போட்டிருக்கிறார். இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 10.02 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: இந்த வாரம் 9.57 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தாலும் அடுத்த வாரம் முதல் இடத்தை பிடித்து விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் சீரியல் ஆரம்பித்து இரண்டு மாதங்களிலேயே மக்கள் மனதை கொள்ளை அடித்து நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. காரணம் சூர்யா மற்றும் நந்தினியின் நடிப்பும் சூர்யாவின் அக்கறையும்தான். இவர்கள் இருவரும் எப்பொழுது புரிந்து கொண்டு கணவன் மனைவியாக வாழ போகிறார்கள் என்பதை எதிர்பார்க்கும் விதமாக நாடகம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

சிங்க பெண்ணே: அன்பு வெளிநாட்டிற்கு போகிறார் என்ற விஷயம் தற்போது பூதாகரமாக ஆனந்தியிடம் வெடித்திருக்கிறது. அன்பு இல்லை என்றதும் ஆனந்தி ஏன் இவ்வளவு பதட்டமடைய வேண்டும் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனந்தி மனதில் அன்பு ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்பது போல் தெரிகிறது. ஆனால் இது எதுவும் தெரியாத மகேஷ், ஒட்டு மொத்த கோபத்தையும் அன்பு மீது காட்டும் விதமாக ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.06 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது.

சுந்தரி: மந்தமாக போய்க்கொண்டிருந்த சுந்தரி சீரியலின் கதை தற்போது விறுவிறுப்பாக போவதற்கு முக்கிய காரணம் கார்த்திக் மற்றும் அணு. அதிலும் அணுவின் எண்டரி ரொம்பவே சுவாரசியமாக இருக்கிறது என்பதற்கு ஏற்ப பல மாதங்களுக்குப் பிறகு இருவரும் ஒன்று சேரப் போகிறார்கள். அத்துடன் சுந்தரி மற்றும் வெற்றியின் திருமணமும் இனி எந்தவித தடையும் இல்லாமல் நடக்கப் போகிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.80 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: ஒரு வழியாக ஆதிரை பிரபுவின் கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது. ஆனால் அதற்காக கஞ்சத்தனமாக இருந்த பிரபு பணத்தை வாரி இறைத்து மகா பிரபுவாக மாறியிருக்கிறார். ஆனால் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத வேல்விழி விஷத்தை சாப்பிட்டு கல்யாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறார். இந்த வாரம் 8.70 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

இதனை தொடர்ந்து புது சீரியலாக நுழைந்த ஒரு வாரத்திலேயே ரஞ்சனி சீரியல் 6.87 புள்ளிகளை பெற்று ராமாயணம் நாடகத்திற்கு அடுத்தபடியாக ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Trending News