Trp Rating Top 5 Serials: ஒவ்வொரு குடும்பங்களில் உள்ள இல்லத்தரசிகள் தினமும் அவர்களுடைய நேரத்தை செலவிடும் விதமாக சீரியல்களை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் எப்பவாவது ஒரு நாள் பார்க்க தவறவிட்டால் கூட அதை போனில் பார்த்து பிறகு தான் தூக்கமே வரும் என்று சொல்லும் அளவிற்கு சீரியலுக்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல்கள் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.
சுந்தரி: சுந்தரி வெற்றிக்கு எப்பொழுது கல்யாணம் ஆகும். அணு உயிரோடு இருக்கிறாரா? கார்த்தி கூட சேர்வாரா என்ற பல திருப்பங்களுடன் நாடகம் விறுவிறுப்பாக கிளைமாக்ஸ் நோக்கி பயணித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.52 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
சீரியலில் அடி வாங்கிய விஜய் டிவி
மருமகள்: பிரபுவுக்கும், அப்பா ஆசையை நிறைவேற்றுவதற்காக கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு பண்ணும் ஆதிரைக்கும் நடக்கும் கல்யாணம் தான் கடந்த சில வாரங்களாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இதை தடுத்து நிறுத்துவதற்கு பிரபுவின் சித்தப்பா குடும்பம் மற்றும் ஆதிரையின் சித்தி சதி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் 8.58 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: சூர்யாவின் கல்யாணம் ஏகபோகமாக ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆசையுடன் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை மாஸாக இருந்த நந்தினி, சூர்யாவின் குடும்பத்துடன் அவமானப்பட்டு வருகிறார். இதை தெரிந்த சூர்யா, அனைவரது மூஞ்சியிலும் கரியை பூசும் விதமாக நந்தினி கழுத்தில் தாலி கட்டப் போகிறார். இந்த ஒரு தருணத்திற்காக நாடகம் சூடு பிடித்துக் கொண்டு போகிறது. இந்த வாரம் 8.71 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
சிங்க பெண்ணே: மகேஷ்காக தன்னுடைய காதலியை விட்டுக் கொடுக்கும் அன்பு எடுத்த திடீர் முடிவால் ஆனந்தி கதி கலங்கி போய் நிற்கிறார். அன்பு ஏன் இப்படி இருக்கிறார் என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் ஆனந்திக்கு தோழி மூலம் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்தை மித்ரா அரங்கேற்றப் போகிறார். இதிலிருந்து ஆனந்தியை அன்பு மீட்டெடுக்கும் விதமாக மறுபடியும் இவர்கள் ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறது. இந்த வாரம் 8.86 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கயல்: கல்யாணம் எப்பொழுது தான் நடக்கும், போங்கய்யா நீங்களும் உங்க கல்யாணமும் என்று மக்கள் புலம்பும் படியான கயல் மற்றும் எழிலின் திருமணம் கேள்விக்குறியாக நிற்கிறது. இவர்களுடைய திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல வழிகளில் சதி நடந்து வருகிறது. அந்த வகையில் கயல் மற்றும் எழிலை பழி வாங்குவதற்காக டாக்டர், கயலை கடத்திக் கொண்டு போய்விட்டார். இது தெரிந்த பிறகு எழில், கயலை கண்டுபிடிக்கும் விதமாக போராடி வருகிறார். இப்படி விறுவிறுப்பான காட்சிகளுடன் இருக்கும் கயல் சீரியல் இந்த வாரம் 10.03 புள்ளிகளில் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.
இப்படி டிஆர்பி ரேட்டிங்கில் இந்த வாரம் முதல் ஐந்து இடத்தை சன் டிவி சீரியல் தான் பிடித்திருக்கிறது. எப்போதும் விஜய் டிவி சிறகடிக்கும் ஆசை சீரியல் ஏதாவது ஒரு இடத்தை பிடித்து விடும். ஆனால் இந்த வாரம் சன் டிவிடம் மொத்தமாக தோற்றுப் போய்விட்டது என்று சொல்வதற்கு ஏற்ப சிறகடிக்கும் ஆசை ரோகிணி கேரக்டரால் வெறுப்பை சம்பாதித்து விட்டது. அதனால் 7.88 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் சரிவை சந்தித்து விட்டது.
- TRP Rating: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 சீரியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
- ஆட்டம் கழண்டு போய் நிற்கும் சிங்க பெண்ணே
- 3 முக்கியமான சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி