this year 5 celebrity wedding to happen: இன்றைய சூழலில் திருமண விஷயத்தைப் பொறுத்தவரை 2K கிட்ஸ் எல்லோரும் ஜெட் வேகத்தில் பறந்து விட 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்ஸோ ஆமை வேகத்தில் அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். திரையுலகில் முரட்டு சிங்கிள்ஸ் பலரும் இப்போது மிங்கிள் ஆகும் கல்யாண வேளை கூடி வந்துள்ளது.
தமன்னா- விஜய் வர்மா: தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா வெப் சீரிஸில் தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார்.
தற்போது சுதா கோங்குராவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் வர்மா. விரைவில் பெற்றோர் சம்பந்தத்துடன் இருவரும் மணவாழ்வில் இணைய உள்ளனர். இதனால் புதிய படங்களில் கமிட் ஆகாமல் உள்ளார் தமன்னா.


வரலட்சுமி- நிக்கோலாய் சச்தேவ்: தென்னிந்தியாவின் சிறந்த வில்லி நடிகையாக தடம் பதித்த வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் அரங்கேறியது. 14 வருட காதல், மூன்று வருட டேட்டிங் என மிக நீண்ட காதல் கதையுடன் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.
பிரேம்ஜி- வினைதா: இந்த வருட நியூ இயர் அன்று தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் விரைவில் திருமணம் ஆக உள்ள செய்தியையும் பகிர்ந்து அதிர்ச்சி அளித்தார் பிரேம்ஜி. மணமாகாத இளசுகள் பலர் பிரேம்ஜியை கண்டு ஆறுதல் அடைந்து கொண்டிருந்தனர்.
அவரோ தன்னைவிட வயது குறைந்த வினைதா என்ற பாடகியை காதலித்து கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார் என்ற செய்தி பலரை வயிற்றெரிச்சலுக்கு உள்ளாக்கியது.


காளிதாஸ் ஜெயராம்- தாரணி: தமிழ்,மலையாள படங்களில் பிசியாக இருக்கும் காளிதாஸ் ஜெயராமுக்கு பிரபல மாடல் அழகி மற்றும் 2019 மிஸ் தமிழ்நாடு வின்னர் தாரணி என்பவருடன்,பிரம்மாண்ட முறையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமண தேதி அறிவிக்க உள்ளனர் இந்த ஜோடி.
விஜய் தேவர்கொண்டா-ராஷ்மிகா மந்தனா: கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் காதல் வயப்பட்ட இந்த நட்சத்திர ஜோடி தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், ஒரே மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டு காதலை வளர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஜோடிக்கும் டும் டும் டும் இருக்கலாம்.