வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

2023ல் பிற மொழிகளில் ரீமேக் ஆன 6 தமிழ் படங்கள்.. ஒரு படத்தை தவிர எல்லாமே ஊத்திக்கிச்சு

 6 Tamil films remake in other languages:  பெரும்பாலும் பிறமொழி படங்கள் தமிழில் அதிகம் ரீமேக் செய்யப்படுகிறது என குற்றம் சாட்டுவதுண்டு. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த வருடத்தில் ஆறு தமிழ் படங்களை ஆசைப்பட்டு பிற மொழிகளில் ரீமிக்ஸ் செய்தனர். ஆனால் அதில் ஒரே ஒரு படம் மட்டுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற்றது.

வேதாளம்: தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படம் அப்படியே தெலுங்கில் போலா சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. வேதாளம் படத்தில் அஜித் நடித்த கேரக்டரில் தெலுங்கில் சிரஞ்சீவியும் நடித்தார். ஆனால் அஜித்துக்கு ஒர்க் அவுட் ஆனது சிரஞ்சீவிக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்த படம் அண்ணன் தங்கை சென்டிமென்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசனும் தங்கையாக லக்ஷ்மி மேனனும் நடித்தனர். அதைப்போல் தெலுங்கில் வெளியான போலா சங்கர் படத்தில் கதாநாயகியாக தமன்னாவும் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்தனர். இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்கினார். ஆசைப்பட்டு வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தாலும் இந்த படம் வசூலில் மண்ணை கவ்வியது.

வீரம்: அஜித் நடிப்பில் வெளியான வீரம் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் ‘கிஸீ கா பாய் கிஸீ கி ஜான்’ என்ற பெயரில் ரிலீஸானது. ஆனால் தெலுங்கு சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் இடம் பெற்றதால் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து விட்டனர். அஜித் நடித்த வீரம் படத்தை சர்வ நாசம் செய்து விட்டீர்களே! என்று சோசியல் மீடியாவில் தல ரசிகர்கள் கொந்தளித்தனர். வீரம் படத்தில் அஜித் தனது நான்கு தம்பிகளுடன் முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த மசாலா படமாக கொடுத்தார். ஆனால் ஹிந்தியில் கொஞ்சம் தூக்கலாகவே மசாலாவுடன் தயாராகி இருந்தது படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

கைதி: லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த கைதி படம் ஹிந்தியில் போலா என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழில் கார்த்தி நடித்த கேரக்டரில் ஹிந்தியில் பாலிவுட் நடிகர் அஜய் தேவகன் நடித்து இயக்கினார். இந்தப் படத்தை அவரே 3டி தொழில்நுட்பத்தில் தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் தபு கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் 25 கோடி பட்ஜெட்டில் உருவான கைதி, 100 கோடி வசூலை தட்டி தூக்கியது. ஆனால் ஹிந்தியில் போலா படம் எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்காமல் ஆட்டம் கண்டது.

Also Read: ஹீரோவாக களமிறங்கும் தனுஷ் குடும்ப வாரிசு.. பச்சைக்கொடி காட்டிய அஜித் பொண்ணு

ஆசைப்பட்டு மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட 6 தமிழ் படங்கள்

மாநகரம்: மாநகரம் படத்தின் வெற்றி தான், இன்று கோலிவுட்டில் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வளர்ந்து நிற்பதற்கு அடித்தளமிட்டது. இந்தப் படம் ஹிந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சந்தோஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்காமல் ஃப்ளாப் ஆனது.

தடம்: அருண் விஜய், வித்யா பிரதீப் நடிப்பில் தமிழில் ஹிட்டான தடம் படத்தின் இந்தி ரீமேக் தான் ஆதித்யா ராய் கபூர் மற்றும் மிருணால் தாக்கூரின் கும்ரா. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட க்ரைம் திரில்லர் படமான தடம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஹிந்தியில் கிடைக்காமல் போனது, வசூலிலும் படு தோல்வியை சந்தித்தது.

வினோதய சித்தம்: சமுத்திரக்கனி இயக்கி நடித்த வினோதய சித்தம் படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்து ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றனர். இதில் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இருவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த படத்தை ஆசைப்பட்டு தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இதில் சமுத்திரக்கனி கேரக்டரில் பவன் கல்யாணும், தம்பி ராமையா கேரக்டரில் சாய் தேஜ் நடித்தனர். இந்த படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்காகவே பல்வேறு மாற்றங்களுடன் தயாரித்து ரிலீஸ் செய்தனர். படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வசூலிலும் அடித்து நொறுக்கியது. இந்த வினோதய சித்தம் படத்தை தவிர பிற மொழிகளில் 2023ல் ரீமேக் ஆன மற்ற ஐந்து படங்களும் தோல்வியாகத்தான் அமைந்தது.

Also Read: சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. எவ்வளவு டார்கெட் பண்ணாலும் சிக்காத அஜித்

- Advertisement -spot_img

Trending News