ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

அதிரடி பொங்கல் இல்ல இந்த வருஷம் காதல் பொங்கல்.. விடாமுயற்சியால் களையிழந்த பண்டிகை

Pongal Release: எப்போதுமே டாப் ஹீரோக்களின் படங்கள் தீபாவளி பொங்கல் பண்டிகையை தான் டார்கெட் செய்யும். அதிலும் பொங்கலுக்கு தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் உண்டு.

அதனால் பல பெரிய படங்கள் இந்த நாளில் வெளிவந்து சக்கை போடு போட்டதுண்டு. அப்படித்தான் இந்த வருஷமும் விடாமுயற்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த நினைப்பில் லைக்கா ஒரு லாரி மண்ணள்ளி போட்டு விட்டது. தற்போது விடாமுயற்சி தள்ளிப்போனதால் பல படங்கள் பொங்கல் ரேஸில் கலந்து கொள்ள தயாராகிவிட்டது.

அதன்படி படைத்தலைவன், சுமோ, டென் ஹவர்ஸ், வணங்கான் என வெரைட்டியான படங்கள் வெளிவருகிறது. அதேபோல் ரொமான்டிக் காதல் படங்களும் ரிலீஸ் ஆகிறது.

விடாமுயற்சியால் களையிழந்த பண்டிகை

அதாவது ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் காதலிக்க நேரமில்லை பொங்கலுக்கு வெளியாகிறது.

மேலும் அதிதி சங்கர், ஆகாஷ் முரளி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள நேசிப்பாயா படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதற்கு முன்னதாக பொங்கலுக்கு ஜில்லா வீரம், பேட்ட விசுவாசம், துணிவு வாரிசு என அதிரடி படங்கள் நேருக்கு நேர் மோதியது.

ஆனால் இந்த வருடம் அதிரடி பொங்கல் காதல் பொங்கலாக மாறிவிட்டது. இந்த முறை போட்டி ஹீரோக்களின் தரிசனம் கிடையாது.

இதனால் பொங்கல் பண்டிகை களை இழந்து விட்டதாக ரசிகர்கள் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் விடாமுயற்சி இந்த மாத இறுதியில் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Trending News