புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இந்த ஆண்டு கூகுளில் அதிகமாக கேட்கப்பட்ட பாடல்.. ஏஆர் ரகுமான் அனிருத் வரிசையில் இடம் பிடித்த இளம் இசையமைப்பாளர்

young music composer: ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்களை அதிகளவில் கவர்ந்த பாடல்கள் எது என்ற பட்டியல் அந்த ஆண்டில் இறுதியில் கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு உலக அளவில் அதிகமாக பார்வையாளர்களை கவர்ந்த பாடல் எதுவென்று கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

பொதுவாக தமிழில் எத்தனையோ பாடல்கள் எக்கச்சக்கமாக வந்திருந்தாலும் அதிகமாக பார்வையர்களை கவரக்கூடிய பாடல்கள் எதுவென்றால் ஏஆர் ரகுமான் மற்றும் அனிருத் பாடிய பாடல்களாக தான் இருக்கும். ஆனால் இவர்களை விட இந்த ஆண்டு புதுசாக வந்த இளம் இசையமைப்பாளர் அந்த இடத்தை தட்டி பறித்து விட்டார்.

அதாவது இளம் இசை அமைப்பாளர் சாய் அபயன்கர் இசையமைத்து பாடிய “எண்ணமே ஏன் உன்னால உள்ள புகுந்தது தன்னால, கண்ணமே என் கண்ணால, வேந்து செவந்து புண்ணாக” என்ற தமிழ் பாடல் கூகுளில் இடம் பிடித்து அசத்தியிருக்கிறது.

இந்த ஆண்டு இடம் பிடித்துள்ள ஒரே இந்திய பாடல் இது மட்டும் தான். அதுவும் அந்த பெருமை தமிழுக்கு கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் பொழுது சாய் அபயன்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இந்த பாடல் youtube-ல் மட்டும் 193 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

இவர் யார் என்றால் பிரபல பின்னணி பாடகரான திப்பு மற்றும் ஹரிணியின் மகனான சாய் அபயன்கர். இவருக்கு சிறு வயது முதலே இசையின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் இவருடைய 19-வது வயதில் இசையமைத்து பாடி அறிமுகமான பாடல் தான் எண்ணமே ஏன் உன்னால. அந்த அறிமுக பாடலிலேயே அனைவரையும் கவர்ந்து பெருமை சேர்த்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45 வது படத்திற்கு இவர் தான் இசையமைக்கப் போகிறார். அடுத்ததாக லோகேஷ் கதையில் உருவாகும் பென்ஸ் படத்திலும் இவர்தான் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் ஏஆர் ரகுமான் மற்றும் அனிருத் வரிசையில் இளம் இசையமைப்பாளராக அவதரித்திருக்கும் சாய் அபயன்கர் இடம் பிடித்து விடுவார்.

- Advertisement -

Trending News