வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

திருப்தி படுத்தாத சினிமா, 13 வருடத்தில் பல ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியை தூக்கி சாப்பிட்ட அரவிந்த்சாமி

Actor Aravindh Swamy: தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பல படங்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளை அடித்தவர் அரவிந்த்சாமி. இவர் நடித்த முக்கால்வாசி படம் காதல் சம்பந்தப்பட்ட படமாக தான் இருக்கும். அதனாலேயே இவருக்கு ரசிகர்கள் அதிகமாக கிடைத்தார்கள். அந்த சமயத்தில் திடீரென்று சினிமாவை விட்டு போய்விட்டார்.

கிட்டத்தட்ட 13 வருடங்கள் சினிமாவில் தலையை காட்டவில்லை. ஆனால் சினிமாவை விட இவருக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது பிசினஸ் மேன் ஆக வேண்டும் என்பதுதான். அதற்காக அந்த வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்த போய்விட்டார். அதாவது இவர் பிறக்கும்பொழுது பெரிய பணக்கார குடும்பத்தில் தான் பிறந்திருக்கிறார்.

Also read: அரவிந்த்சாமி படத்தில் நடிக்க மறுத்த நடிகை.. அக்கடதேசம் வரை பரவிய மணிரத்னம் புகழ்

அதன் பின் இருவருடைய 23 வது வயதில் அப்பா அம்மாவை இழந்து தனியாக வாழத் தொடங்கி விட்டார். அந்த சமயத்தில் இவரை கை கொடுத்து காப்பாற்றி ஓரளவுக்கு கரை சேர்த்து விட்டது சினிமா தான் என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமாக பிள்ளையார் சுழி போட்டு வழி வகுத்தவர் இயக்குனர் மணிரத்தினம்.

அதன் பின் சினிமா பயணத்தை தொடர்ந்து இவர் 1999இல் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, இவருடைய கனவாக இருந்த பிசினஸில் சாதிக்க சென்று விட்டார். அப்பொழுது கிட்டத்தட்ட 13 வருடங்கள் அயராமல் பிசினஸில் மட்டும் கவனம் செலுத்தி வந்ததால் தற்போது 3300 கோடி வரை லாபம் பார்த்திருக்கிறார்.

Also read: செட்டாகாத 5 படத்தில் நடித்த அரவிந்த்சாமி.. வெங்கட் பிரபுவை நம்பி மோசம் போன சாக்லேட் பாய்

இந்த மாதிரியான ஒரு சாதனையை செய்த பிறகு தான் மறுபடியும் சினிமாவிற்கு ரீ என்டரி கொடுத்து நடித்து வருகிறார். இவ்வளவு சாதனைகளை செய்து அமைதியாகவே இருந்து வருகிற மிகப்பெரிய பணக்காரர் தான் அரவிந்த்சாமி. இவரிடம் இருக்கும் பணம் கூட தற்போது உள்ள சூப்பர் ஸ்டார்களிடம்  இருக்காது.

சினிமாவில் இவருடைய சம்பாத்தியம் திருப்தி அடையவில்லை என்பதால் எடுத்த முயற்சியில் சாதனை படைத்துவிட்டார். தற்போது ரஜினியே தூக்கி சாப்பிடும் அளவிற்கு கோடி கணக்கில் பணம் சம்பாதித்து இருக்கிறார். இப்படி ஒரு தன்னம்பிக்கையான மனிதர் தமிழ் சினிமாவில் இருப்பது மற்ற நடிகர்களுக்கு பெருமையான விஷயமாக இருக்கிறது.

Also read: அரவிந்த்சாமி அசத்திய 5 சூப்பர் ஹிட் படங்கள்.. மூன்று மெகா ஸ்டார்களுடன் அறிமுகமான கூட்டணி

Trending News