ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அஜித் வீடு சுக்குநூறா வெடிக்க போகுது.. போலீசிடம் மிரட்டிய நபர் யார் தெரியுமா?

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் நபர்களிடம் தான் வெடிகுண்டு மிரட்டல் உருட்டல் என அனைத்தும் வரும். அப்படித்தான் தல அஜித் வீட்டிற்க்கும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்திற்கு திடீரென ஒரு போன் கால் வந்தது. அந்த போனில் பேசியவர் நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சிறிது நேரத்தில் இந்த இடம் சுக்குநூறாக வெடிக்கும் எனவும் சொல்லிவிட்டு தொலைபேசியை கட் செய்து போய்விட்டார்.

உடனே உஷாரான போலீசார் தங்களுடைய மேலதிகாரிகளுக்கு செய்தியை தெரிவித்தனர். இதையடுத்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜீத்தின் வீட்டிற்கு போலீசார் சோதனை நடத்தினர் சாதாரண சோதனை அல்ல வீடு முழுக்க தேடி விட்டனர்.

ரொம்ப நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இதுதொடர்பாக நீலாங்கரை போலீசார் காவல் நிலையத்தில் போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு இணைந்து யார் இந்த வேலை செய்தது என ஆராய்ச்சி செய்து வந்தனர்.

ajith-cinemapettai
ajith-cinemapettai

கடைசியாக விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி சேர்ந்த புவனேஸ்வர் என்ற ஒருவர் என்று செய்தி வெளிவந்தது. ஆனால் வழக்கம் போலவே சற்று மனநலம் பாதித்தவர் என கூறப்பட்டு அவர் குடும்பத்தினர் எச்சரித்து அனுப்பி விட்டனர்.

இப்படியே நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைவருக்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தங்களுடைய லாக்டவுன் நேரத்தில் தங்களின் நேரத்தை பொழுதுபோக்காக வைத்துள்ளனர் சிலர் எனவும் கூறி வருகின்றனர்.

Trending News