அச்சுறுத்தும் அனுராக், மகளை பறிகொடுத்த விஜய் சேதுபதி.. ரத்தம் தெறிக்க விட்ட மகாராஜா ட்ரெய்லர்

Vijay sethupathi in Maharaja Trailer: விஜய் சேதுபதியின் வளர்ச்சி ஒவ்வொரு படத்திலும் டபுள் ஆகி கொண்டே இருக்கிறது. அதனால்தான் என்னமோ இப்பொழுது தான் வந்த மாதிரி இருக்கிறது, அதற்குள் 50வது படத்தை நெருங்கி விட்டார். குரங்கு பொம்மை படத்தை எடுத்த நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் நடித்திருக்கிறார். இதில் இவருடன் சேர்ந்து அனுராக், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியன், அபிராமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் வருகிற 14-ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. அதற்கு முன்னோடியாக இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீசாகி இருக்கிறது. அந்த வகையில் கே.கே நகரில் சலூன் நடத்தி வரும் விஜய் சேதுபதி மகளை காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கும் ஒரு தந்தையின் பாசத்தை வெளிக்காட்டும் விதமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மகளை நினைத்து தவிக்கும் விஜய் சேதுபதி

ஆனால் இவரை அலட்சியப்படுத்தும் விதமாக போலீஸ் ஸ்டேஷனில் சில கேலியும் கிண்டலும் பண்ணுகிறார்கள். இதனால் விஜய் சேதுபதி, நடராஜனிடம் உங்களால் முடியவில்லை என்றால் இந்த கேசை சிபிஐசிடி இடம் மாற்ற சொல்லுங்கள் என்று கெஞ்சுகிறார். இதைக் கேட்ட நடராஜன், விஜய் சேதுபதியை தாக்குகிறார். இதனால் வேறு ஏதாவது ஒரு விதத்தில் மகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி முயற்சி எடுக்கிறார்.

அப்பொழுது லஞ்சமாக பணம் கேட்கப்படுகிறது. அத்துடன் விஜய் சேதுபதியை ஏமாற்றும் விதமாக அனுராக் வில்லத்தனத்தில் மிரட்டி அச்சுறுத்துகின்றார். ஆனாலும் மகளை நினைத்துப் பார்க்கும் பொழுது அவர்களை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கொன்று விடுவேன் என்பதற்கு ஏற்ப விஜய் சேதுபதி ஆவேசமாக அனைவரையும் தும்ஸம் பண்ணுகிறார்.

வழக்கம் போல் வன்முறையை அதிகமாக காட்டி ரத்தம் சொட்ட சொட்ட சண்டை காட்சிகள் இருக்கிறது. அத்துடன் செண்டிமெண்ட் காட்சிகளையும் கலந்து வைக்கப்பட்டு ஒரு கலவையான படமாக தான் இருக்கப் போகிறது தான் விஜய் சேதுபதியின் மகாராஜா.

மேலும் இன்னும் ரிலீசுக்கு ஒரு சில நாட்கள் மட்டும் இருக்கும் பட்சத்தில் இப்பொழுதுதான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பெற்றோர்களும் குடும்ப வேலைகளில் பிஸியாக இருக்கும் பட்சத்தில் இப்படம் ரிலீஸ் க்கு வந்திருப்பது எந்த அளவிற்கு வெற்றியை பெரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனாலும் இப்படத்துடன் போட்டி போடுவதற்கு வேறு எந்த பெரிய படங்களும் வரிசையில் இல்லை. இருந்த போதிலும் நேற்று அர்ஜுனுக்கு மருமகனான உமாபதி நடிப்பில் உருவாகியுள்ள பித்தல மாத்தி படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகப்போகிறது. ஆக மொத்தத்தில் இந்த இரண்டு படங்கள் மட்டுமே போட்டி போடப் போகிறது.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் அப்டேட்