திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி வீட்டுக்கு அருகே வீடு வாங்கிய 3 பிரபலங்கள்.. காரணம் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

Actor Vijay: தளபதி விஜய் ஆரியபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பிரம்மாண்ட முறையில் தனது அலுவலகத்தை நிறுவியுள்ளார். இந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டாலும் தளபதி வாங்கிய காரணத்தினாலேயே மற்ற பிரபலங்களும் அங்கு வீடு வாங்க ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இப்போது அங்கு மூன்று பிரபலங்கள் வீடு வாங்கி விட்டனர். இந்நிலையில் மலையாளத்தில் முன்னணி நடிகரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் அந்த அப்பார்ட்மெண்டில் பிரம்மாண்ட வீடு ஒன்று வாங்கியுள்ளாராம். அந்த வீடு கிட்டத்தட்ட 9000sq இருக்கிறதாம். கடல் போல் இருக்கும் அந்த வீட்டின் மதிப்பு 30 கோடி என கூறப்படுகிறது.

Also Read : மாஸ்டர் மாமாவை கண்டுகொள்ளாத விஜய்.. பதிலுக்கு தளபதிக்கு வந்த தலைவலி

துல்கர் சல்மான் மலையாள படங்களில் தான் முன்னணி நடிகராக இருந்தாலும் சென்னையில் நிறைய இடங்களில் வீடு வாங்கியுள்ளார். இந்த சூழலில் விஜய் அலுவலகம் பக்கத்தில் வீடு வாங்குவதற்கான காரணம் பெரிய இயக்குனர்களின் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை என கூறப்படுகிறது.

துல்கர் சல்மானை தொடர்ந்து சேவியர் பிரிட்டோ இதே அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கி உள்ளார். விஜய்யின் மாஸ்டர் பட தயாரிப்பாளர் மட்டுமல்லாமல், தளபதியின் சொந்தக்காரர் தான் பிரிட்டோ. மாஸ்டர் படம் மிகப்பெரிய ஹிட் ஆனாலும் விஜய் அதன் பிறகு இவரை கண்டு கொள்ளவில்லையாம்.

Also Read : விஜய் தவற விட்டு ஃபீல் பண்ணிய 5 படங்கள்.. விக்ரமின் வெற்றி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி

ஆகையால் விஜய்யின் அருகில் இருந்தால் எப்படியும் அவரது கண் பார்வை தன் மேல் படும் என்பதற்காக இவ்வளவு செலவு செய்து வீடு வாங்கி இருக்கிறார். இதன் மூலம் மீண்டும் விஜய்யின் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இவர்களைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் அஸ்வினும் அங்கு வீடு வாங்கி இருக்கிறார்.

அஸ்வின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இதனால் சென்னையில் வீடு வாங்குவது சர்வசாதாரணம்மாக இருந்தாலும் விஜய்யின் அலுவலகத்திற்கு பக்கத்தில் வாங்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாம். முதன் முதலில் விஜய் இங்கு இடம் வாங்கிய நிலையில் அவருக்காகவே இப்போது பிரபலங்களும் அங்கு வீடு வாங்க ஆசைப்பட்டு வருகின்றனர்.

Also Read : விஜய்யிடம் காரை பரிசாக வாங்கிய 4 பிரபலங்கள்.. ஓடாத படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவையா தளபதி

Trending News