சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பாண்டியன் கண்ணில் மண்ணைத் தூவ போகும் மூன்று மருமகள்கள்.. தங்கமயிலுக்காக ஓவராக உதவி செய்யும் மீனா ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் குடும்பத்துடன் ஏதாவது பிரச்சனை பண்ணி அவமானப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று சக்திவேல் கிடைக்கிற கேப்பில் எல்லாம் தொந்தரவு கொடுத்து வருகிறார். அந்த வகையில் அம்மாச்சி, கதிர் மீது இருக்கும் பாசத்தினால் கோமதி வீட்டிற்குள் சென்று பேசிவிட்டு வெளியே வரும் பொழுது சக்திவேல் மற்றும் முத்துவேலு பார்த்து விடுகிறார்கள்.

உடனே இதுதான் சான்ஸ் என்று இரண்டு பேருமே அம்மா என்று கூட கொஞ்சம் யோசிக்காமல் ஓவராக பேசி காயப்படுத்தி விட்டார்கள். இதனை பார்த்த பாண்டியன், உங்க அம்மாவாக இருந்தாலும் இந்த அளவிற்கு மட்டும் தட்டி பேசுவதை என்னால் பார்த்துக் கொள்ள முடியாது. கொஞ்சம் கூட மனசாட்சியும் பாசமும் இல்லாமல் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று தட்டி கேட்க ஆரம்பித்து விட்டார்.

இதை பார்த்த முத்துவேலு, கடைசியாக அம்மாவிடம் கேட்ட சத்தியம் என்னவென்றால் என்னுடன் வருவதாக இருந்தால் இந்த குடும்பத்தை தலைமுழுகி விட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு உள்ளே வா என்று சொல்லிட்டார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தத்தளித்த அம்மாச்சி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்ட நிலையில் அதைப்பற்றி எந்த விஷயமும் வெளிவராமல் தங்கமயில் பற்றிய விஷயங்கள் தற்போது வந்திருக்கிறது.

ஆனாலும் அம்மாச்சி பையன் வீட்டோடு தான் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தினால் முத்துவேலு கேட்ட சத்தியத்தை பண்ணிவிட்டு மகன்களிடமே தஞ்சம் அடைந்திருப்பார். அடுத்ததாக பாண்டியன், தங்கமயிலிடம் உனக்கு வேலை தருவதாக சொன்ன வாத்தியார் நீ எப்போ வருவாய் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் இன்னைக்கே போய் வேலையில் சேர்ந்து விடு என்று சொல்லி கடைக்கு கிளம்பி விட்டார்.

ஆனால் நான் எப்படி வேலைக்கு போவது என்று பதட்டம் அடைந்த தங்கமயில், சரவணன் மூலமாக தடுத்து பார்க்கலாம் என்று சரவணன் இடம் நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன், எனக்கு வேலைக்கு போக இஷ்டம் இல்லை என்று. என்னை பொறுத்தவரை வீட்டு வேலையை பார்த்து உங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. அதனால் மாமாவிடம் எப்படியாவது சொல்லி தடுத்து விடுங்கள் என்று கெஞ்சி பார்க்கிறார்.

ஆனால் சரவணன், அப்பா சொல்லிவிட்டால் என்னால் மறுத்து எதுவும் பேச முடியாது. அதனால் நீ இன்றைக்கு வேலைக்கு போய் சேர்ந்து விடு என்று சொல்லி கடைக்கு கிளம்பி விடுகிறார். ஆனால் தங்கமயில் பதட்டத்தையும் பரிதவிப்பையும் பார்த்த மீனா, படிப்பு விஷயம் எடுத்தாலே அக்கா முகத்தில் ஒரு பயம் தெரிகிறது. என்ன பிரச்சனை இருக்கு என்று நாம் கேட்போம் என ராஜியிடம் சொல்லி தங்கமயில் ரூமுக்கு போகிறார்கள்.

அந்த வகையில் தங்கமயிலை பார்த்ததும் ராஜி, அக்கா உங்களுடைய சர்டிபிகேட்டில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள் நாம் நகை விஷயத்தை மறைத்த மாதிரி ஏதாவது செய்து மறைத்து விடலாம் என்று மீனா மற்றும் ராஜி கூட்டணி சேர்ந்து தங்கமயிலை காப்பாற்றுவதற்காக கேட்கிறார்கள்.

அதனால் தங்கமயிலுக்கும் வேறு வழியிலே உண்மையை சொல்லி தான் ஆக வேண்டும் என்பதால் மீனா மற்றும் ராஜிடம், தான் படிக்கவில்லை என்ற ரகசியத்தை போட்டு உடைக்க போகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான ராஜி மற்றும் மீனா வழக்கம் போல் இதே சமாளிக்கும் விதமாக தங்கமயிலை காப்பாற்றும் நினைப்பில் பாண்டியன் கண்ணில் மண்ணைத் தூவும் விதமாக பிளான் போட்டு தங்கமயில் வேலைக்கு போகாமல் தடுத்து விடுவார்கள்.

ஆனால் இப்படியே தங்கமயில் செய்த எல்லா தில்லாலங்கடி வேலைக்கு தொடர்ந்து மீனா மற்றும் ராஜி உதவி செய்து கொண்டே வந்தார்கள் என்றால் கடைசியில் எல்லா உண்மையும் தெரிந்த பின்பு தங்கமயில் தப்பித்து விடுவார். அதற்கு பதிலாக மீனா மற்றும் ராஜி பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார்கள்.

Trending News