திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

Mark Antony- Chandramukhi 2: பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ், கங்கனா ரானாவத் ஆகியோர் நடிப்பில் சந்திரமுகி 2 படம் வெளியாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு படத்தில் சில வேலைகள் இருப்பதால் தாமதமாக அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.

மேலும் இதற்குக் காரணம் விஷாலின் மார்க் ஆண்டனி படம் வெளியாக உள்ளதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்த காரணத்தினாலும் சந்திரமுகி 2 தள்ளிப்போனதாக கூறப்பட்டது. லாரன்ஸ் நினைத்தது போல் மார்க் ஆண்டனி படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

Also Read : ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

தற்போது நல்ல நேரம் விஷாலுடன் போட்டி போடவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் லாரன்ஸ். ஆனாலும் அவருடைய சந்திரமுகி 2 படத்துடன் மூன்று படங்கள் மோத இருக்கிறது. அதில் சந்திரமுகி 2 படத்திற்கு பிறகு அதிக எதிர்பார்ப்பு உள்ள படம் என்றால் ஜெயம் ரவியின் இறைவன். தனி ஒருவன் சாயலில் இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் நயன்தாராவும் இந்த படத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக தான் இருக்கிறது. அடுத்ததாக பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் சித்தா என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Also Read : ஜவானை ஆட்டம் காண வைத்த மார்க் ஆண்டனி.. மிரட்டும் 3 நாள் வசூல் ரிப்போர்ட்

இப்படம் சித்தார்த் மற்றும் ஒரு குழந்தை இடையே ஆன கதை களத்தை கொண்டிருக்கிறது. கடைசியாக ஆதாம் பாவா இயக்கத்தில் இயக்குனர் அமீர் மற்றும் மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் உயிர் தமிழுக்கு படமும் செப்டம்பர் 28ஆம் தேதி சந்திரமுகி 2 படத்துடன் போட்டியிட இருக்கிறது.

ஆகையால் ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படங்கள் ஒரே நாளில் வெளியாகுவதால் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் லாரன்ஸின் சந்திரமுகி படம் கண்டிப்பாக ஓரளவு நல்ல வசூலை பெறும் எனும் கோலிவுட் வட்டாரத்தில் நம்பப்பட்டு வருகிறது.

Also Read : மார்க் ஆண்டனி சிலுக்குக்கும் நிஜ சிலுக்குக்கும் இவ்வளவு ஒற்றுமையா.? ஜொள்ளு விடும் மீசக்கார மாமா

Trending News