திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் கொடுத்த உத்வேகம்.. ரஜினிக்கு வரிசைகட்டி நிற்கும் 3 படங்கள்

Rajini Upcoming Movies: ஜெயிலர் படம் இமாலய வெற்றி பெற்ற நிலையில் ரஜினி இதே உத்வேகத்துடன் அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் காட்டி வருகிறார். இப்போது 72 வயதாகும் ரஜினி ஹீரோவாக தற்போதும் படத்தை தாங்கி பிடித்து வருவது எல்லோருக்குமே ஆச்சரியமான விஷயம் தான். அதுவும் ஜெயிலர் படத்தில் அவருடைய எனர்ஜி வேற லெவலில் இருந்தது.

இதைத்தொடர்ந்து ரஜினி நடிப்பில் அடுத்ததாக இதே ஆண்டு வெளியாக இருக்கிறது லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

Also Read : கமலுக்கு 4 படம், ரஜினிக்கு இரண்டோடு நிறுத்திய பாரதிராஜா.. படுதோல்வியால் சூப்பர் ஸ்டாரை கைவிட்ட இயக்குனர் இமயம்

லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். ஒட்டுமொத்த ரசிகர்கள் ஜெய் பீம் படத்தை பாராட்டிய நிலையில் மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை தான் ஞானவேல் இயக்குவதாக கூறப்படுகிறது.

கண்டிப்பாக ஜெயிலர் போல் தலைவர் 170 படமும் ரஜினிக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அடுத்ததாக ரஜினியை இரண்டு இயக்குனர்கள் லாக் செய்து வைத்திருக்கிறார்கள். அதாவது லோகேஷ் ரஜினியின் கடைசி படத்தை இயக்க இருக்கிறார்.

Also Read : ரஜினி, விஜய் ரசிகர்களை குதூகல படுத்திய ஷாருக்கான்.. ஜவான் மேடையை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார்

இந்த படம் மல்டி ஸ்டார் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாகவே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஷங்கர் சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற பிளாக்பஸ்டர் படங்களை ரஜினிக்கு கொடுத்திருக்கிறார்.

அந்த வரிசையில் இப்போது மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணி இணைய இருக்கிறது. ரஜினி 72 வயதிலும் அசராமல் அடுத்தடுத்த படங்கள் புக்காக இருக்கிறார். மேலும் இந்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அப்டேட் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Also Read : நடுராத்திரியில் நடிகையின் வீட்டுக்கு சென்று டோஸ் விட்ட ரஜினி.. மகளுக்காக தலைவர் எடுத்த மாணிக் பாட்ஷா அவதாரம்

Trending News