முதல் காலாண்டில் வசூல் வேட்டையில் இறங்கிய 3 படங்கள்.. விடாமுயற்சியை வீழ்த்திய நடிகர்

Vidaamuyarchi: 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சற்று மந்தமாகத்தான் சென்றது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியான நிலையில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அவ்வாறு முதல் காலாண்டில் பெரிய அளவில் படங்கள் வெற்றி பெற்ற வில்லை. என்றாலும் முதல் மூன்று இடத்தை பிடித்து வசூல் வேட்டை செய்த படங்களின் வரிசையை பார்க்கலாம்.

மூன்றாவது இடத்தில் சுந்தர் சி, விஷால் கூட்டணியில் உருவான மதகத ராஜா படம் இடம்பெற்று உள்ளது. 12 வருடம் கழித்து வெளியான இந்த படம் வரவேற்பை பெற்று 63 கோடி வசூல் செய்திருக்கிறது.

முதல் காலாண்டில் வசூல் வேட்டையாடிய மூன்று படங்கள்

இரண்டாவது இடத்தில் அஜித்தின் விடாமுயற்சி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் 138 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்திருந்தது. இதை அடுத்து அஜித்தின் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்திற்காக காத்திருக்கிறார்கள்.

முதல் இடத்தை எதிர்பார்க்காத படம் தான் பிடித்து இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் 152 கோடி வசூல் செய்து நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்த நிலையில் நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது. பிரதீப் அடுத்தடுத்து சிக்சர் அடித்து வருகிறார்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்