சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

100% சக்சஸ் கொடுத்த 3 இயக்குனர்கள்.. ஷங்கரையே மிஞ்சிய சிஷ்யன்

Shankar : கோலிவுட் சினிமாவில் பல வருடமாக சினிமாவில் உள்ள இயக்குனர்கள் வெற்றி, தோல்வி என இரண்டு படங்களை கொடுத்திருக்கின்றனர். அதில் சிலர் விதிவிலக்காக வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்து வருகின்றனர்.

அவர்களது ஒரு படம் கூட சோடை போகாமல் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இதன் காரணமாக அந்த படங்கள் பெரிய அளவில் வசூலையும் பெற்றிருக்கிறது. அப்படி உள்ள மூன்று இயக்குனர்களை பார்க்கலாம்.

முதலாவதாக தனது குரு ஷங்கரை மிஞ்சி இருக்கிறார் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார். ஆனாலும் அவர் கடைசியாக இயக்கிய இந்தியன் 2 நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றிருந்தது.

நூறு சதவீதம் வெற்றி கொடுத்த மூன்று கோலிவுட் இயக்குனர்கள்

ஆனால் அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் தனது கேரியரை தொடங்கிய நிலையில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை எடுத்து வெற்றி கண்டார். மேலும் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை எடுத்து ஆயிரம் கோடி வசூல் செய்திருந்தார்.

அடுத்ததாக வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் கேரியரை தொடங்கிய நிலையில் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டார். இப்போது விடுதலை 2 படம் வெளியாகி உள்ள நிலையில் இதுவும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களை இயக்கி உள்ளார். இதில் லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து வருகிறார்.

Trending News