தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் பல இசையமைப்பாளர்கள் ஒன்றாக பணியாற்றுவது அரிதான விஷயம். அப்படி தளபதி விஜய்யின் கேரியரில் ஒரு சூப்பர் ஹிட் படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
மிகக் குறுகிய கால தயாரிப்பாக இருக்கும் சில படங்களில், பாடல்களுக்கு ஒரு இசையமைப்பாளர் மற்றும் பின்னணி இசைக்கு வேறு ஒரு இசையமைப்பாளர் என பயன்படுத்திக் கொள்வார்கள். படத்தின் ஷூட்டிங் நாட்களை கருத்தில் கொண்டு சீக்கிரத்தில் முடிப்பதற்காக இப்படி சில இயக்குனர்கள் செய்வார்கள்.
குறிப்பாக சுந்தர் சி அடிக்கடி தன்னுடைய படங்களில் பாடல்களுக்கு ஒரு இசையமைப்பாளரும், பின்னணி இசைக்கு ஒரு இசையமைப்பாளரையும் பயன்படுத்திக் கொள்வார்கள். அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் சூப்பர் ஹிட் படம் ஒன்றில் மூன்று இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருப்பாச்சி. மாஸ் ஹிட் அடித்த திருப்பாச்சி படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர். இசையமைப்பாளர் தீனா, தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் மணிசர்மா போன்றோர் பணியாற்றினார்.
அதில் தேவி ஸ்ரீ பிரசாத் கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடலுக்கும், மணிசர்மா கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு என்ற காதல் பாடலுக்கும் இசையமைத்தனர். மற்றபடி மீதியுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் தீனா செய்து கொடுத்தார்.
திருப்பாச்சி படம் விஜய்யின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் இயக்குனரான பேரரசுவே படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.