வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாண்டியன் ஸ்டோர் உடன் இணைந்த மற்றொரு சீரியல்.. உதவி பண்ண போகும் பாக்கியா

விஜய் டிவி டி ஆர் பிக்காக இரண்டு சீரியல்களை ஒன்றாக இணைத்து மெகா சங்கமம் என்று ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து நடித்து வருகின்றனர்.

சென்னைக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் எதிர்பாராதவிதமாக தமிழும் சரஸ்வதியும் குடும்பத்தினரை சந்திப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் தமிழின் அம்மா கோதை தன்னுடைய தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்கிறார். ஆனால் கோதையின் சம்மந்தி அந்த விருந்தை கெடுப்பதற்காக சமையல்காரருக்கு பணம் கொடுத்து சமைக்கக் கூடாது என்று கூறுகிறார்.

இதனால் சாப்பாடு எப்படி சமைப்பது என்று குழம்பி நிற்கும் கோதையிடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் நான் சமைப்பதற்கு வேறு ஆளை ஏற்பாடு செய்துவிட்டேன் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாக்கியலட்சுமி சீரியல் நாயகி பாக்யா கோதை வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். பாக்கியாவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் தனம். பின்னர் அனைவரும் பாக்யாவுக்கு உதவி செய்து சமையலை நல்லபடியாக முடிக்கின்றனர்.

விருந்து நடைபெறாது என்ற எண்ணத்தில் வீட்டுக்கு வரும் கோதையின் சம்பந்தி அங்கு உணவுகள் சமைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறாக 2 சீரியல்கள் இணைந்த மெகா சங்கமத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இணைந்துள்ளது.

இதுவரை விஜய் டிவியில் இரண்டு சீரியல்களை மட்டுமே இணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பி வந்தது. தற்போது முதல் முறையாக மூன்று சீரியல்கள் இணைந்துள்ளது. நல்லவேளை பாக்யா, இட்லிக்கு மாவு இல்லை என்று கண்ணம்மாவை கூப்பிடல இல்லைனா நான்கு சீரியல் இணையும் மகா சங்கமமாக மாறியிருக்கும்.

Trending News