திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முத்துவேல் பாண்டியன் அலப்பறையால் பின் வாங்கிய டாப் ஹீரோக்கள்.. மூன்று வாரம் வசூல் வேட்டை

Actor Rajini: சூப்பர் ஸ்டார் முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டி இருக்கும் ஜெயிலர் வரும் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என ஏகப்பட்ட நட்சத்திர கூட்டங்கள் நடித்திருக்கின்றனர்.

மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதனாலேயே படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அதை இன்னும் அதிகரிக்கும் வண்ணம் தமன்னாவின் கலக்கல் நடனத்தில் உருவான காவாலா, தலைவரின் ஹுக்கும் என இரண்டு பாடல்களும் வெளியாகி சோசியல் மீடியாவை ஆதிக்கம் செய்தது.

Also read: ரஜினிக்கு அலர்ஜியான 5 விஷயங்கள்.. எல்லாத்துக்கும் முடிவு கட்டி ஓட விட்ட சூப்பர் ஸ்டார்

அதை தொடர்ந்து ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவும் ட்ரெண்டானது. இப்படி எங்கு திரும்பினாலும் ஜெயிலர் பற்றிய பேச்சு தான் இப்போது களை கட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் முத்துவேல் பாண்டியன் அலப்பறையை காண இப்போது ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சின்ன பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் இந்த மாதம் ரிலீஸ் ஆகாமல் பின்வாங்கி இருக்கிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆகஸ்ட் மாதம் தான் வெளிவர இருந்தது.

Also read: 72 வயதில் சும்மா கிடைக்குமா சூப்பர் ஸ்டார் பட்டம்?. ஏழு வருடத்தில் 70 படங்கள் நடித்த சாதனை

ஆனால் ஜெயிலர் பட ரிலீஸ் அறிவிப்பால் வசூலுக்கு பயந்து அவர்கள் ஜூலை மாதமே படத்தை ரிலீஸ் செய்தனர். அதே போன்று விஷாலின் மார்க் ஆண்டனி, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 ஆகிய படங்களும் செப்டம்பர் மாத வெளியீடாக வர இருக்கிறது.

இந்த வாரமும் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அந்த வகையில் அடுத்த மூன்று வாரங்களும் தலைவரின் அலப்பறையாக தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது படத்தின் வியாபாரமும் லாபகரமாக சென்று கொண்டிருப்பதால் வசூலும் பட்டையை கிளப்பும் என சினிமா விமர்சகர்கள் இப்போதே தங்கள் கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

Also read: ரஜினிக்கு வில்லனாகும் கமல்.. அடுத்த 1000 கோடி வசூலுக்கு லோகேஷ் போடும் புது கணக்கு!

Trending News