திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Asvins Movie Review- கொல நடுங்க வைத்த திரில்லர் படம்.. அமானுஷ்யம், அஸ்வின்ஸ் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

Asvins Movie Review: திரில்லர் வகையை சேர்ந்த அமானுஷ்ய படங்கள் எப்போதுமே நல்ல வரவேற்பை பெறும். அதனாலேயே அது தொடர்பான படங்களை புது டெக்னாலஜிகளை கொண்டு வித்தியாசமான முறையில் கொடுக்கும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதை அம்சத்துடன் வெளிவந்திருக்கும் படம் தான் அஸ்வின்ஸ்.

அறிமுக இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம். ஐந்து நண்பர்கள் உலகிலேயே அமானுஷ்ய பகுதியாக பார்க்கப்படும் லண்டன் தீவில் இருக்கும் ஒரு மேன்ஷனுக்கு செல்கின்றனர்.

Also read: புளிச்சு போன 7 வருட திருமண வாழ்க்கை.. தளபதியின் ஆஸ்தான நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா.?

யூடியூபர்களாக இருக்கும் இவர்கள் அங்கு நடப்பதை வீடியோ எடுத்து அதன் மூலம் ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் முடிவில் இருக்கின்றனர். அதற்காக ஆபத்தான இடத்திற்கு செல்லும் அவர்கள் எந்த மாதிரியான பிரச்சனையை சந்தித்தார்கள், அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை.

பக்கா திரில்லர் கதையாக இருக்கும் இதில் சில புராண சம்பவங்களையும் கலந்து நம்மை மிரள விட்டிருக்கும் இயக்குனருக்கு முதலில் பாராட்டுகளை தெரிவிக்கலாம். அதிலும் திரில்லர் படத்திற்கே உண்டான சவுண்ட் எபெக்ட்டுடன் பகீர் கிளப்பும் பல விஷயங்களை கொண்டு கதை நகர்வது படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்திருக்கிறது.

Also read: சூர்யா கூட நடிக்க மாட்டேன்னு மறுத்த நடிகை.. அந்த ரோலே வேண்டாம் என நிராகரித்த கியூட் நடிகை

அது மட்டுமல்லாமல் சில எதிர்பாராத திகில் காட்சிகள் நம்மை தூக்கி வாரி போட வைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பின்னணி இசை தான். அந்த வகையில் யார் இந்த இசையமைப்பாளர் என்று தேடும் அளவுக்கு நம்மை வியக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் சித்தார்த். சில இடங்களில் ஹாலிவுட் பேய் படங்களை பார்த்த ஞாபகம் வந்தாலும் கொல நடுங்க வைக்கும் காட்சிகள் அதை மறக்கடிக்கிறது.

அதிலும் விமலா ராமனின் கதாபாத்திரம் படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்தி இருக்கிறது. அதேபோன்று வசந்த் ரவியும் தனக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருக்கிறார். இப்படியாக நம்மை மிரள வைத்திருக்கும் இந்த அஸ்வின் திகில் பட பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சில இடங்களில் இயக்குனர் சறுக்கி இருந்தாலும் மொத்தத்தில் படம் மீண்டும் பார்க்கத் தூண்டும் அளவுக்கு நன்றாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த அஸ்வின்ஸ் அமானுஷ்ய மிரட்டல்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

Trending News