புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தரமான நடிகைக்கு தமிழ் சினிமாவில் ஏற்பட்ட பஞ்சம்.. நயன்தாரா முடிவால் திரிஷா காட்டில் வெளுத்து கட்டும் மழை

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை கதாநாயகர்களை விட கதாநாயகிகள் ஒரு படத்தில் நடிப்பதற்கு அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஏகப்பட்ட வரையறைகள் வைத்திருப்பார்கள். மேலும் புதிதாக வரும் கதாநாயகிகளை சட்டென்று ஏற்றுக்கொள்வது என்பது ரொம்பவும் கடினமான ஒன்றுதான்.

இப்படி கதாநாயகிகளுக்கு என்று பல டிமாண்டுகள் இருக்க, கோலிவுட்ல படத்தில் நடிப்பதற்கு கதாநாயகிகளுக்கே பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. யாரை தேர்வு செய்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் திணறி வருகிறார்கள். இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பது முன்னணி ஹீரோக்களின் படங்கள் தான்.

Also Read: திரிஷா அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள 5 படங்கள்.. 19 வருடத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் குந்தவை

பொதுவாக வளர்ந்து வரும் நாயகர்கள் என்றால் ஏதாவது ஒரு நடிகையை நடிக்க வைத்து விடலாம். ஆனால் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்களுக்கு கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் உண்டு. அதனால் தான் இப்போது இவர்களின் படங்களின் நடிப்பதற்கு கதாநாயகிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் நடிகை நயன்தாராவை எத்தனை கோடி சம்பளம் கொடுத்து வேண்டுமானாலும் நடிக்க வைத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது நயன்தாரா சொன்ன மாதிரி திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே தலை காட்டி வருகிறார். இதுதான் கோலிவுட்டில் ஏற்பட்ட பஞ்சத்திற்க்கே காரணம்.

Also Read: நடிகை படுத்தும் பாடு, பொன்னியின் செல்வன் 2 நடிக்க மறுக்கும் ஹீரோக்கள்.. ஆளை மாற்றும் மணிரத்தினம்

ஆனால் நயன்தாராவின் இந்த முடிவு யாருக்கு சாதகமாக அமைந்ததோ இல்லையோ திரிஷாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. நயன்தாரா திருமணம் சமயத்தில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆக, புதுப்பொலிவுடன் இருக்கும் குந்தவையான த்ரிஷாவை மீண்டும் ட்ரெண்ட் ஆக்கினார்கள் ரசிகர்கள். இதனால் த்ரிஷாவை லாக் செய்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.

இப்போது த்ரிஷாவும் வந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்டார். இப்போது அடுத்தடுத்து வரும் பெரிய ஹீரோக்களின் படங்களில் எல்லாம் த்ரிஷா தான். இன்னும் குறைந்தது ஐந்து வருஷத்துக்கு த்ரிஷாவின் மார்க்கெட்டை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இப்போதைக்கு த்ரிஷா தளபதி 67ல் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

Also Read: மணிரத்னத்தை மிஞ்சும் அளவிற்கு கதையை செதுக்கி உள்ள லோகேஷ்.. தளபதி 67-ல் விஜய் செய்யப் போகும் சம்பவம்

Trending News