Kamal : கமல் இப்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.
இதைத்தொடர்ந்து நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினம், கமல் கூட்டணியில் உருவாகிறது தக் லைஃப் படம். இந்நிலையில் ஆண்டவரால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாக வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
அதாவது கமல் எப்போதுமே இயக்குனருடன் கதை விவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக இருக்கும். கமலின் முந்தைய பட தோல்விக்கு இதுவும் காரணம் என பலர் விமர்சித்தது உண்டு.
ஆனால் விக்ரம் படத்தில் கமலின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க லோகேஷின் டைரக்ஷனில் எடுக்கப்பட்டது. தனக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக லோகேஷ் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். மேலும் விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது.
மணிரத்னத்துடன் கூட்டணி போடும் கமல்
கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் இளம் நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற நடிகர்களின் படங்களும் லயன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில் கமல் தயாரிப்பில் படம் இயக்க வினோத், மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் கூட முன் வந்தனர்.
அதுவும் வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை விவாதத்தின் போது தான் சிக்கல் ஏற்பட்ட அந்த படம் டிராப்பானது. இப்போது மணிரத்தினத்துடனும் தக் லைஃப் படத்தை பற்றி கமல் பேசியிருக்கிறார். இந்த விவாதத்தால் படப்பிடிப்பு ஆரம்பமாவது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
முதலில் மணிரத்தினம் மற்றும் கமல் இருவரும் நாயகன் படத்தை எடுப்பதற்காக பம்பாய் சென்றபோது கமலின் வாட்ச் தொலைந்து உள்ளது. வரதராஜன் முதலியார் பற்றி தெரிய வர அவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாயகன் படம் எடுக்கப்பட்டது.
அந்தப் படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. நாயகன் 1987 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன் பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் இருவருமே இணையவில்லை. மீண்டும் இந்த வெற்றி கூட்டணி இணைந்துள்ளதால் தக் லைஃப் மீது எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கிறது. இப்போதும் நாயகன் போல் ஒரு கதை சிக்கினால் ஜாக்பாட் தான்.