திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

Simbu : சிம்பு இணைந்ததால் எகிறிய தக் லைஃப் மவுசு.. டிஜிட்டல் உரிமை மட்டும் இத்தனை கோடியா?

சிம்பு மாநாடு படத்திற்குப் பிறகு மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறார். அவர் அடுத்தடுத்து நடித்து வெளியாகும் படங்கள் எல்லாமே ஹிட் ஆகி வருகிறது. இந்நிலையில் மணிரத்தினம், கமல் கூட்டணியில் தக் லைஃப் படம் உருவாகுவது முன்பே அறிவிப்பு வெளியானது.

சமீபத்தில் கூட இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது. ஆரம்பத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற பிரபலங்கள் நடிப்பதாக இருந்த நிலையில் சில காரணங்களினால் அவர்கள் படத்திலிருந்து விலகி விட்டனர். அதன் பிறகு தான் தக் லைஃப்பில் என்ட்ரி கொடுத்தார் சிம்பு.

மேலும் சமீபத்தில் சிம்பு என்ட்ரி வீடியோவும் படக்குழு வெளியிட்டது. சிம்புவின் மவுசால் தக் லைஃப் படத்தின் விற்பனையும் அதிகமாகி இருக்கிறது. வெளிநாடுகளில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை ஆரம்பத்தில் 45 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.

அதிக விலைக்கு வெளிநாட்டில் டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்ட தக் லைஃப்

இப்போது சிம்பு இந்த படத்தில் கமிட்டான உடன் கிட்டத்தட்ட 60 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. மேலும் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் பல கோடி விற்கப்பட உள்ளது. ரிலீசுக்கு முன்பே பெரிய லாபத்தை தக் லைஃப் படம் பெற இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் திரிஷா, அபிராமி, ஐஸ்வர்ய லட்சுமி, கௌதம் கார்த்திக், நாசர் போன்ற பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதோடு சிம்புவுக்கு ஜோடியாக தான் திரிஷா இந்த படத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே வினை தாண்டி வருவாயா படத்தில் சிம்பு, திரிஷா கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால்தான் மணிரத்தினம் இந்த படத்தில் மீண்டும் இந்த ஜோடியை இணைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் 60 கோடிக்கு தக் லைஃப் வெளிநாட்டு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending News