தக்லைஃப் படத்தில் நடித்துள்ள பிரபல தேசிய விருது வென்ற நடிகர் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அவருக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
தக்லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தக்லைஃப். இப்படத்தில் கமலுடன் இணைந்து த்ரிஷா, சிம்பு, ஜெயம்ரவி, பங்கத் திரிபாதி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை மணிரத்னம், கமல், மகேந்திரன், ரெட் ஜெயிண் மூவிஸ் உள்ளிட்டோர் தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இப்படம் ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக வந்திருப்பதாலும், அது கமல் உள்ளிட்ட அனைவருக்கும் திருப்தியாக அமைந்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேசிய விருது பெற்ற நடிகர் ஜோஜு ஜார்ஜ்
இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகிறது. மலையாள சினிமாவில் மழவில் கூடரம் படத்தின் மூலம் ஜூனியர் ஆர்டிஸ்டாக அறிமுகம் ஆனவர் ஜோஜு. அதன்பின், 90 களிலும், 2000களிலும் சிறிய ரோல்களில் நடித்து படிப்படியாக முன்னேறி, 2010 களில், துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து எல்லோரது கவனத்தையும் பெற்றார்.
அதன்பின், ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா, யாத்ரா சோடிக்காதே, லூக்கா சுப்பி ஆகிய படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்ததற்காக அவர் கேரள அரசின் திரைப்பட விருதைப் பெற்றார். பின்னர், 2019 ஆம் ஆண்டு பத்மகுமார் இயக்கிய ஜோசப் படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இப்படம் தேசிய விருது வென்றது.
இயக்குனர் அவதாரம்
இப்படி தொடர்ந்து முக்கியத்துவம் உள்ள கேரக்டரிலும் நடித்து வந்தவர். தனுஷ்- கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ஜகமே தந்திரம் படத்தின் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார் ஜோஜு ஜார்ஜ். இவர் நடிப்பது மட்டுமின்றி, சார்லி, ஜோசப், சோழா, பொரிஞ்சு மரியம் ஜாஸ், மதுரம் உள்ளிட்ட 7 படங்களை தயாரித்துள்ளார். நடிப்பு, தயாரிப்பு மட்டுமின்றி தற்போது இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஜோஜு ஜார்ஜ்.
சூர்யா வாழ்த்து, கோலிவுட் எதிர்பார்ப்பு
அதன்படி, பனி என்ற படத்தை இயக்கியுள்ளார் ஜோஜு ஜார்ஜ். இப்படத்தில், நாடோடிகள் அபிநயா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் கதை: கேரள மா நிலம் திருச்சூரில் 2 குரூப்பிற்கு இடையில் நடக்கும் பிரச்சனை மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
இப்படம் வரும் 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள்ள நிலையில், பனி படத்தின் டிரைலரை சூர்யா தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டு ஜோஜுக்கு வாழ்த்துகள் கூறியது குறிப்பிடத்தகக்து.
தேசிய விருது பெற்ற இந்தியாவின் முன்னணி இயக்குனர்களின் குட் புக்கில் இருக்கும் ஜோஜு ஜார்ஜ், தற்போது கமலின் தக்லைஃப், சூர்யாவின் 44 படத்தில் நடித்துள்ள நிலையில், புதிதாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஜோஜூ ஜார்ஜ் இப்படத்தின் மூலம் இனிமேல் இயக்குனராகவும் ஜொலிப்பார், பிரபல நடிகர்களை வைத்து படம் இயக்குவார் என டிரைலரை பார்த்த பலரும் கூறி வருகின்றனர். இப்படமும் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பை பெருமா? என்பதை இப்படம் ரிலீஸிற்குப் பிண் தெரிந்து கொள்ளலாம்.