திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முதல் நாள் புக்கிங் வசூல் விவரம்.. துணிவுடன் சொன்ன கணிப்பை தவுடு பொடியாக்கியதா வாரிசு.?

8 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக் கொள்ளும் தல தளபதியின் துணிவு மற்றும் வாரிசு போன்ற 2  படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக்குவதால் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். எனவே இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

ஆகையால் தற்போது துணிவு மற்றும் வாரிசு படத்தின் முதல் நாள் டிக்கெட் மூலம் எவ்வளவு வசூலாகி இருக்கிறது என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதிலும் பலர் அஜித் படமான துணிவு தான் தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டும் என கணித்திருந்தனர்.

Also Read: அஜித்தின் இயக்குனர் என்பதை நிரூபித்த வினோத்.. ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்

ஏனென்றால் இதுவரை நடந்த மோதல்களில் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களின் படங்களை விட அஜித்தின் படங்களுக்கு தான் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வசூலை வாரி குவித்தது. அதேபோன்றுதான் துணிவும் வாரிசு படத்தின் வசூலை அடித்து நொறுக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்களது எதிர்பார்ப்பை தவுடு பொடியாக்கும் வகையில் முதல் நாள் புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட் வசூல் மூலம் வாரிசு படம் தான் முன்னிலை வகிக்கிறது. இதுவரை ப்ரீ சேல் மூலம் 4 கோடியே 61 லட்சத்தை வாரிசு வசூல் செய்திருக்கிறது. அதேபோல் துணிவு 4 கோடியே 56 லட்சத்தை முதல் நாள் டிக்கெட் முன்பதிவின் மூலம் வசூல் செய்துள்ளது.

Also Read: ட்ரைலர்லாம் டம்மி தான்..படத்துல கதைலாம் இல்ல.. துணிவு படத்திற்கு ரிவ்யூ கொடுத்த சென்சார் போர்டு

எனவே இந்த இரண்டு படங்களுக்கும் மிகக் குறைந்த அளவில் வித்தியாசம் இருப்பதால் வரும் ஜனவரி 12ம் தேதி வரை இந்த வசூல் விவரத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட போகிறது. ஆனால் இப்போது இருக்கும் நிலவரத்தை பார்த்தால் குடும்ப செண்டிமெண்ட் படமாக எடுக்கப்பட்டிருக்கும் வாரிசு படத்திற்கு தான் அதிக டிக்கெட் புக் ஆகியுள்ளது.

மேலும் இளசுகள் விரும்பும் துணிவு படமும் அடுத்தடுத்த நாட்களில் நிறைய புக் ஆகி வாரிசை பின்னுக்குத் தள்ள வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் துணிவு மற்றும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் வாரிசு படத்தை திரையரங்கில் ரணகளம் செய்ய ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: உளறி தள்ளிய மஞ்சு வாரியர்.. கடுப்பில் ஹெச்.வினோத்தின் பட குழு

Trending News