இளசுகளை கவரும் விதத்தில் ஆக்சன் திரைப்படமாக அஜித்தின் துணிவு மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கதைகளை கொண்ட விஜய்யின் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ம் தேதி ரிலீசானது. இந்நிலையில் ஒரு வாரம் முடிவில் இரண்டு படங்களின் வசூல் விவரமும் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த வசூல் விபரத்தை வைத்து பார்த்தால் தமிழ்நாட்டில் துணிவை நெருங்க கூட முடியாத நிலையில் வாரிசு உள்ளது. முதல் நாள் சைலன்டாக கலெக்சன் துவங்கிய துணிவு இப்போது விஜய்யின் வாரிசு படம் நெருங்க கூட முடியாத அளவுக்கு வசூலில் சக்கை போடு போட்டிருக்கிறது.
Also Read: அஜித் பாணியில் களமிறங்கிய 80-களின் வெள்ளிவிழா நாயகன்.. கைக்கொடுக்குமா ரீ-என்ட்ரி ?
அதிலும் துணிவு படத்தின் மொத்த வசூலில் இருந்து 30 சதவீதம் வாரிசு பின்தங்கி இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. துணிவு படம் முதல் நாளில் 24.59 கோடியை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்த நிலையில், படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் அலைமோதியது.
இதைத்தொடர்ந்து மூன்றே நாட்களில் 100 கோடியை கடந்த துணிவு ஒரே வாரத்தில் 111.83 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி யாரும் எதிர்பாராத அளவிற்கு நேற்றைய தினத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடியும், உலக அளவில் 200 கோடியையும் வசூலித்தது. இதனால் துணிவு படத்திற்கு போட்டியாக ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் வாரிசு படம் ஒரு வாரத்தில் வெறும் 70.34 கோடியை வசூலித்திருக்கிறது.
Also Read: மீண்டும் இணையும் மெகா கூட்டணி.. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகும் அஜித்
தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் துணிவு படத்திற்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் துணிவு படத்தின் வசூல் டல் அடிப்பது போல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவினாலும் கடைசியில் அஜித்தின் துணிவு தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது.
எனவே எட்டு வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக்கொள்ளும் தல தளபதி இருவரில் யார் நம்பர் ஒன் என பல நாட்களாக இணையத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த வசூல் விவரத்தை வைத்தே அஜித்தான் நம்பர் ஒன் என தல ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.
Also Read: வாரிசு மண்ணை கவ்வியதுன்னு யாருப்பா சொன்னா.? துணிவுக்கு போட்டியாக வசூலை அள்ளிய விஜய்