வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரே நடிகருக்காக அடித்துக்கொண்ட H.வினோத், வம்சி.. கடைசியில் தட்டி தூக்கிய வாரிசு

தற்போது சமூக வலைதளங்களை திறந்தாலே வாரிசு, துணிவு பற்றிய செய்தி தான் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பிறகு இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது தான் இந்த பரபரப்புக்கு காரணம். அதிலும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே இது ஒரு பெரிய விவாதமாகவே மாறி உள்ளது.

இந்நிலையில் வாரிசு பட நடிகரை துணிவு பட வில்லனாக நடிக்க வைக்க பட குழு முயற்சித்து இருக்கிறது. இந்த தகவல் தற்போது ஆச்சரியத்தையும் அதே சமயத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.

Also read: ரஜினியை பின்பற்றும் அஜித், விஜய்.. எந்த தைரியத்துல இப்படி எல்லாம் செய்றாங்க

இந்தப் படத்தில் தமிழில் சில வருடங்களுக்கு முன் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் ஷாம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரைத்தான் துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதற்காக வினோத் கேட்டிருக்கிறார். இந்த தகவலை ஷாம் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதாவது வாரிசு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு கால்ஷூட் தேதிகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்ட நேரத்தில் அவருக்கு துணிவு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒருமுறை இயக்குனர் வினோத் அவருக்கு போன் செய்து இது பற்றி கூறியிருக்கிறார். இப்படி ஒரு வாய்ப்பை எதிர்பார்க்காத ஷாம் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

Also read: தளபதி 67 பட பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.. விஷாலுக்கு பதிலாக ஆக்சன் ஹீரோ

ஆனால் வாரிசு திரைப்படத்திற்காக அவர் எந்த தேதிகளை ஒதுக்கி கொடுத்தாரோ அதே தேதி தான் அவர்களுக்கும் வேண்டும் என கேட்டிருக்கிறார்கள். இதனால் அதிர்ந்து போன ஷாம் வாரிசு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனது பற்றியும் தேதியை மாற்ற முடியுமா என்றும் கேட்டிருக்கிறார். ஆனால் துணிவு படத்திற்கான செட் அனைத்தும் போடப்பட்டு விட்டதால் அதே தேதி தான் வேண்டும் என வினோத் கூறியிருக்கிறார்.

இதன் காரணமாகத்தான் அவரால் துணிவு திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இந்த தகவலை அவர் இப்போது வருத்தத்துடன் கூறி இருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கால்ஷூட் பிரச்சனையால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இருப்பினும் அஜித் படத்தில் எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என ஷாம் தெரிவித்துள்ளார்.

Also read: விளம்பரம் தேவையில்லை என சொன்னது எல்லாம் பொய்யா.? வினோத்தை வைத்து துணிவு அஜித் ஆடும் ஆட்டம்

Trending News