திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

துணிவு படத்தால் பெரும் பின்னடைவை சந்தித்த வாரிசு.. வசூல் வேட்டையில் விஜய்க்கு வந்த ஆபத்து

விஜய், அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார்கள். இணையத்தில் இந்த இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே கடுமையான வாக்குவாதங்கள் நிலவி வருகிறது. இந்த சூழலில் நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் போட்டி போட உள்ளனர்.

அதாவது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

Also Read :தளபதிக்கு பயத்தை காட்டிய துணிவு படத்தின் வியாபாரம்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் அஜித்

வாரிசு படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித், வினோத், போனி கபூர் கூட்டணியில் துணிவு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இந்நிலையில் டாப் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் யார் வசூலை வாரி குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் வாரிசு படத்தை லலித் குமார் வாங்கி உள்ளார்.

Also Read :இதிலும் விஜய்க்கு போட்டியான அஜித்.. துணிவு கதையில் இருக்கும் சீக்ரெட்

இந்த சூழலில் தற்போது 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வா ரிசு மற்றும் துணிவு படம் வெளியாக உள்ளது. இதில் இப்போதைய தகவலின்படி துணிவு படத்திற்கு 650 தியேட்டர்களும், வாரிசு படத்திற்கு 550 தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணிவை விட 100 திரையரங்குகள் கம்மியாக வாரிசு படம் வெளியாக உள்ளது.

இதனால் முதல் நாள் வசூல் வேட்டையில் விஜயின் வாரிசு படம் பெரும் சருக்களை சந்திக்கும் என கூறப்படுகிறது. ஆகையால் விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும் விரைவில் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கான ரிலீஸ் தேதி வெளியாக உள்ளது.

Also Read :பெரிய கும்பிடு போட காத்திருக்கும் விஜய்.. வாரிசு டீமால் நிம்மதியை தொலைத்த தளபதி

Trending News