புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

100 கோடி கிளப்பில் இணைந்த துணிவு.. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் செய்த உண்மையான வசூல் விவரம்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் அஜித்தின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் ஹீரோயின் மஞ்சு வாரியரும் பின்னி பெடல் எடுத்துள்ளார்.

துணிவு படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சரியான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணிவுடன் போட்டியிட்ட வாரிசு படம் குறைவான வசூல் தான் பெற்றுள்ளது.  ஒரு வாரம் கடந்த நிலையில் தமிழ்நாட்டில் துணிவு படம் செய்த உண்மையான வசூல் விவரத்தை பார்க்கலாம்.

Also Read : துணிவு பட ஒரிஜினல் மைபா இவர்தான்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

துணிவு படத்தின் முதல் நாள் அதாவது ஜனவரி 11ஆம் தேதி கிட்டத்தட்ட 24.59 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து மறுநாள் 14.32 கோடி வசூல் செய்திருந்தது. அடுத்தடுத்த நாட்களில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் வசூல் சற்று குறைய தொடங்கியது.

அதன்படி மூன்றாவது நாளில் 12.06 கோடியும், நான்காவது நாளில் 13.12 கோடியும் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்த அடுத்தடுத்து பொங்கல் விடுமுறை நாட்கள் வந்ததால் படத்தின் வசூல் சற்று அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி துணிவு ஐந்தாவது நாளில் 15.85 கோடி வசூல் பெற்றது.

Also Read : துணிவு படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகர்.. அஜித் செய்யாததை செய்து காட்டிய வாரிசு நடிகர்

மேலும் ஆறாவது நாள் முடிவில் 16.10 கோடி வசூல் செய்தது. ஒரு வாரம் கடந்த நிலையில் நேற்று 15 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக 111.04 கோடி துணிவு படம் வசூல் செய்துள்ளது. 7 நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் துணிவு படம் இணைந்துள்ளது. தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஆகையால் வரும் நாட்களில் துணிவு படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. துணிவு படத்தின் வெற்றியால் வாரிசு படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதுவும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வாரிசு படம் வசூலில் பெருத்த அடி வாங்கி உள்ளது.

Also Read : அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தெம்பில்லாத துணிவு.. தலை கால் புரியாமல் ஆடும் வாரிசுவின் ஆட்டநாயகன்

Trending News