புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஆன்லைன் புக்கிங்கில் முதலிடம் யாருக்கு தெரியுமா.? உச்சகட்ட மோதலில் வாரிசு Vs துணிவு

அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது வாரிசா மற்றும் துணிவா என்று போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களிடையே போராட்டம் நடந்து வருகிறது. அதிலும் துணிவு படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தின் சென்சார் சர்டிபிகேட் படி துணிவு படம் அதிகமான சர்ச்சையில் சிக்கிக் கொண்டது. அதாவது அந்தப்படத்தில் அதிகமான கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியதால் பீப் சவுண்ட் மற்றும் அப்படத்தில் கன்சாட் மற்றும் கிரைம் சீன் இருப்பதால் இப்படத்திற்கு வெளிநாடுகளில் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

Also read: முதல் நாள் புக்கிங் வசூல் விவரம்.. துணிவுடன் சொன்ன கணிப்பை தவுடு பொடியாக்கியதா வாரிசு.?

இதை அடுத்து இப்படத்தின் படக்குழுவினர் செய்வதறியாமல் இருந்தனர். ஆனால் இப்பொழுது துணிவு படத்துக்கு தமிழ் நாட்டில் எதிர்பார்த்ததைவிட அமோக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக துணிவு படத்திற்கு சில முக்கிய அப்டேட்கள் வெளியாகி உள்ளது.

வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு அட்வான்ஸ் ஆன்லைன் புக்கிங் மற்றும் ஸ்கிரீன் அதிகமாக கிடைத்திருக்கு. இது துணிவு படத்துக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல அஜித்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இதை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் இந்த படம் அமைந்துள்ளது.

Also read: சென்சாரால் மீண்டும் துணிவுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. வசூலுக்கு வச்ச பெரிய ஆப்பு

மேலும் இதன் எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. விஜய் படத்திற்காக அதிகமான பிரமோஷன் இசை வெளியீட்டு விழா ஆடியோ லான்ச், டிரைலர் என ஓவராக அலட்டிக் கொண்டு வந்தார்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதற்கேற்றார் போல துணிவு படத்திற்காக எவ்விதப் பிரமோஷன் செய்யாமல் பில்டப் பண்ணாமல் அமைதியாக இருந்ததே அவரை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது .

என்னதான் வெளிநாடுகளில் துணிவு படத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிக வசூலைப் பெற்று அஜித்தின் துணிவு படம் தற்போது நிலவரப்படி முதலிடம் பெற்றுள்ளது. அந்த வகையில் வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளி துணிவு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: வேகமெடுக்கும் பொங்கல் ரேஸ்.. வாரிசு, துணிவு ப்ரீ பிசினஸ் இன்றைய நிலவரம்

Trending News