புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர்.. தூக்கத்தை தொலைத்த அஜித்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித், விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருந்து வருகிறார்கள். இன்று காலை 1 மணி முதலே தியேட்டரில் ரசிகர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர். ரசிகர்கள் சந்தோஷத்தை வெளிக்காட்டும் விதமாக மிகவும் ஆர்ப்பரித்து கொண்டாடி வருகின்றனர்.

இதனால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. துணிவு படத்திற்கு பாசிட்டிவ் கருத்துகளை மக்கள் சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல் எல்லா ரசிகர்களுமே அவரை புகழ்ந்து வருகிறார்கள். இது தியேட்டர்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ரசிகர்கள் கலவரத்தில் இறங்கி சேதம் ஆகிய தியேட்டர்.

Also read: அஜித் மிரட்டும் ஒன் மேன் ஷோ.. துணிவு எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

சென்னை ரோகிணி தியேட்டரில் அதிக அளவில் கலவரம் நடந்து வருகிறது. இதை அடுத்து இந்த திரையரங்கில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கிழிக்கப்பட்டது. மேலும் யாரும் சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதில் படம் பார்க்க வந்த ரசிகர் பரத்குமார் என்பவர் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி மீது ஏறி நடனமாடிய போது கீழே விழுந்து முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அனைவரையும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது.

Also read: ஆன்லைன் புக்கிங்கில் முதலிடம் யாருக்கு தெரியுமா.? உச்சகட்ட மோதலில் வாரிசு Vs துணிவு

அஜித் தனது ரசிகர்கள் நேரத்தைக் கூட வீணாக வேண்டாம் என்று நினைப்பவர். அவருக்கு இப்படிப்பட்ட செய்தியானது மிகுந்த மன உளைச்சலை தான் கொடுக்கும். தனக்காக பேனர் வைக்க வேண்டாம், ரசிகர் மன்றம் வேண்டாம் என்று இருப்பவருக்கு ரசிகர்கள் தங்கள் சார்பில் இந்த விதமான அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

நேற்றைய விவரப்படி வாரிசு படத்தை விட அஜித்தின் துணிவு படத்திற்கு முன்பதிவு அதிகமாக உள்ளதாக கணக்கீடு வந்துள்ளது. ஒரு சில பிரச்சனைகளைத் தாண்டி அவருடைய முந்தைய திரைப்படங்களைப் போலவே இந்த படமும் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: அதிகாலை காட்சிக்கு தடை.. சண்டையால் வாரிசு, துணிவு படத்திற்கு அதிரடி உத்தரவிட்ட அரசு

Trending News