செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஒரு கை பார்க்க துணிந்த அஜித்.. பரம ரகசியமாக நடக்கும் பிரமோஷன்

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படத்தை அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் படத்தின் பிரமோஷன் தற்போது களை கட்டிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பெற்றிருக்கும் லைக்கா நிறுவனம் ஏற்கனவே ஸ்கை டைவிங் முறையில் ட்ரெய்லர் தேதியை அறிவித்திருந்தது.

இது பரபரப்பை கிளப்பிய நிலையில் அடுத்த கட்ட பிரமோஷனுக்கான வேலைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சமீப காலமாக வெளிவரும் அஜித்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவையே கலக்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி இருக்கும் அஜித்தின் குடும்ப புகைப்படமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

Also read: நீயா நானா போட்டியில் துணிவுக்கு விட்டுக் கொடுத்த வாரிசு விஜய்.. உறுதியான ரிலீஸ் தேதி

ஆனால் இதில் தான் ஒரு ராஜதந்திரம் இருக்கிறது. அதாவது துணிவு திரைப்படம் தொடங்கப்பட்டதிலிருந்தே இது போன்ற போட்டோக்கள், வீடியோக்கள் அதிக அளவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது ரிலீஸ் நாள் நெருங்குவதால் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கவே இந்த ஃபேமிலி போட்டோ வெளியிடப்பட்டுள்ளதாம். அதற்கேற்றவாறு இப்போது வாரிசு படத்தை விட துணிவு திரைப்படம் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது.

ஆரம்பத்தில் ரொம்பவும் வேகமாக அடுத்தடுத்த போஸ்டர்கள், பாடல்கள் என வெளியிட்டு வந்த வாரிசு டீம் தற்போது ட்ரெய்லரை வெளியிடாமல் சொதப்பி இருக்கிறது. இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் படத்தில் இன்னும் முக்கிய வேலைகள் முடியவில்லை என்ற செய்தியும் ரசிகர்களை அதிர்வடைய வைத்துள்ளது. இதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட துணிவு டீம் இப்போது அஜித்திடம் பிரமோஷன் பற்றி பேசி இருக்கிறார்கள். அவரும் எப்படி வேண்டுமானாலும் ப்ரமோஷன் செய்து கொள்ளுங்கள் என்று முழு சுதந்திரம் கொடுத்து விட்டாராம்.

Also read: தலைகால் புரியாமல் ஆடும் விஜய் பட ஹீரோயின்.. தெனாவட்டு பேச்சால் சரியும் மார்க்கெட்

ஆனால் என்னை மட்டும் எதிலும் சேர்க்க வேண்டாம் என்ற கண்டிஷனும் போட்டிருக்கிறாராம். இதுவே போதும் என்று குஷியான பட குழு ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஆச்சரியங்களை தருவதற்கு களத்தில் இறங்கியுள்ளது. மேலும் பட ரிலீஸை அறிவிப்பதிலும் பயங்கர சஸ்பென்ஸ் இருக்கிறது. ஏனென்றால் வாரிசு திரைப்படத்தின் தேதியை பார்த்த பிறகு ஒரு நாள் முன்னதாக தங்கள் படத்தை வெளியிடலாம் என்று அஜித் முடிவெடுத்துள்ளார். ஒரே நாளில் இரு படங்களும் வெளியானால் கலெக்சன் பற்றிய பரபரப்பு அதிகமாகிவிடும்.

அதனாலேயே வாரிசு படத்திற்கு முந்தைய நாள் துணிவு படத்தை வெளியிட்டு கல்லா கட்டிவிட அஜித் செம பிளான் போட்டிருக்கிறாராம். அந்த வகையில் வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியும் துணிவு அதற்கு முந்திய நாள் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் இந்த பொங்கலை வாரிசு, துணிவுடன் கொண்டாட தயாராகி விட்டனர்.

Also read: ரக ரகமாக துப்பாக்கிகளுடன் விளையாடிய அஜித்.. புத்தாண்டு ட்ரீட்டாக அனல் தெறிக்கும் துணிவு டிரெய்லர்

Trending News