வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாரிசுக்கு முன்பே வெளியாகும் துணிவு டிரெய்லர்.. திட்டம் போட்டு காய் நகர்த்தும் தயாரிப்பாளர்

விஜய் மற்றும் அஜித் இருவரின் படங்கள் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டியிட உள்ளது. விஜய் எப்போதும் போல மாஸ் படங்களை கைவிட்டு விட்டு துணிச்சலாக சென்டிமென்ட் கதையை கையில் எடுத்துள்ளார்.

மேலும் விஜயின் வாரிசு படத்தின் முதல் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல் அஜித்தின் துணிவு படத்திற்கும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்போதே இணையத்தில் ரசிகர்கள் வாரிசு, துணிவு படத்தை பற்றி தான் பேசி வருகிறார்கள்.

Also Read : விஜய் எந்த இயக்குனரிடமும் காட்டாத நெருக்கம்.. அட்லீக்காக எப்பவும் கதவை திறந்து வைத்திருக்கும் தளபதி

இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் இரண்டு படங்களுக்குமே வசூலில் பாதிப்பு ஏற்படும். ஏனென்றால் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களாக பார்க்கப்படும் விஜய், அஜித் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியானால் வசூல் சமமாக தான் பிரிக்கப்படும். அதுவே தனித்தனியாக வெளியானால் கண்டிப்பாக நல்ல லாபத்தை பார்க்கலாம்.

ஆனால் வாரிசு மற்றும் துணிவு தயாரிப்பாளர்கள் இந்த முறை போட்டு பார்த்தே ஆக வேண்டும் என ஒரே நாளில் இவர்களின் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் வாரிசு மற்றும் துணிவு இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு வேலையையும் செய்து வருகிறார்கள்.

Also Read : தீ தளபதிக்கு போட்டியாக வந்த கேங்ஸ்டா.. அனல் பறக்கும் அஜித்தின் துணிவு பாடல்

சமீபத்தில் பிரம்மாண்டமாக வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் வைக்கப்பட்டது. இதனால் வாரிசு படத்திற்கு இப்போது ஹைப் கொஞ்சம் அதிகமாகியுள்ளது. இதை ஓவர் டெக் செய்ய துணிவு படம் தற்போது திட்டம் தீட்டி உள்ளது. அதாவது வாரிசு படத்தின் டிரைலர் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

ஆனால் போனி கபூர் வாரிசு ட்ரெய்லர் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அதாவது டிசம்பர் 31ஆம் தேதி துணிவு படத்தின் டிரைலரை வெளியிட உள்ளார். ஆகையால் டிசம்பர் 31ஆம் தேதி மட்டும் இன்றி ஜனவரி ஒன்றும் துணிவை பற்றி தான் பேச வேண்டும் என்று படக்குழு முடிவு செய்துள்ளனர். ஆகையால் இந்த புத்தாண்டு யாருக்கு அதிர்ஷ்டம் என டிரெய்லர் வெளியானால் மட்டுமே தெரிய வரும்.

Also Read : அன்புன்னா என்ன தெரியுமா.? வாரிசு மேடையில் விஜய் சொன்ன குட்டி கதை

Trending News