சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஹாலிவுட் பத்திரிக்கையை வியக்க வைத்த துணிவு.. வேற லெவல் ரீச்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த பதினொன்றாம் தேதி உலகெங்கும் ரிலீசாகி இருக்கும் அஜித்தின் துணிவு திரைப்படம் தற்போது ஹாலிவுட் பத்திரிக்கையாளர்களையும் கவர்ந்தெடுத்துள்ளது. இந்த படத்தில் வங்கிக் கொள்ளையை வைத்து தரமான மெசேஜை அஜித் கொடுத்திருப்பதால், ஆக்சன் திரைப்படமாக வெளியாகி இருக்கும் துணிவு படத்திற்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதிலும் பொங்கலுக்கு தொடர் விடுமுறையை திரையரங்கில் துணிவு படத்துடன் ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் தான் அஜித் மாஸ் என சொல்லப்பட்ட நிலையை மாற்றி, இப்போது ஹாலிவுட் ரசிகர்களையும் துணிவு கவர்ந்திழுத்துள்ளது.

Also Read: யார் நம்பர் ஒன்.. பரபரப்பான வசூல் விவரத்தை வெளியிட்ட சென்னை தியேட்டர்

ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்காரையே வாங்கினாலும் ஆச்சரியம் இல்லை என்று கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஹாலிவுட் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் துணிவு படத்தை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து இந்தியாவிலிருந்து துணிவு என்ற ஹாலிவுட் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த படம் மிக சிறப்பாக உள்ளது. இதைப் பார்க்க பல அமெரிக்கர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக அலைமோதுகின்றனர். இதனால் தமிழகத்தில் எப்படி ஒவ்வொரு திரையரங்குகளிலும் துணிவு படத்திற்கு ஹவுஸ்புல் ஆகிறதோ அதே நிலைதான் அமெரிக்காவிலும் ஏற்பட்டிருக்கிறதாம்.

Also Read: இனி ஒரு உயிர் போகக்கூடாது, ஆட்டமெல்லாம் வாரிசு துணிவோடு முடிஞ்சு.. அஜித், விஜய் எடுத்த அதிரடி முடிவு

மேலும் 51 வயதில் ஓல்ட் கெட்டப்பில் மாஸ் ஆன லுக்கில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இதனால் ஹாலிவுட் ரசிகர்கள் பலரும் துணிவு படத்தின் மூலம் அஜித்தின் தீவிர ஃபேன் ஆகியுள்ளனர். மேலும் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் துணிவு தற்போது 100 கோடியை எட்டி பாக்ஸ் ஆபிஸையும் கலக்கி உள்ளது.

அத்துடன் ஹாலிவுட் பிரபல பத்திரிக்கையாளர் துணிவு படத்தைக் குறித்து புகழ்ந்து பேசி இருக்கும் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. இந்த செய்தியை வைத்து இப்போது தல அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர்.

Also Read: கொழுந்துவிட்டு எரியும் வாரிசு, துணிவு விவகாரம்.. பகிரங்க மிரட்டல் விடுத்த ரெட் ஜெயிண்ட்

Trending News