2014 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மாஸ் வெற்றி பெற்ற படம் துப்பாக்கி. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருப்பார்.
ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. கோலிவுட்டில் முன்னணி நடிகர்களிடம் கதைகளை கூறி வாய்ப்பு பெற முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.
இதனால் மற்ற மொழி நடிகர்களையும் அணுகியும் எந்த பிரயோஜனமும் இல்லை. தற்போது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை கையிலெடுத்து உள்ளாராம். ஏ ஆர் முருகதாஸ் இதற்காக தளபதி இல்லாத ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி வருகிறாராம்.
இந்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி நடித்த துப்பாக்கி படம் பல கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கமலஹாசனை வைத்து எந்த ஒரு இரண்டாம் பாகமும் இதுவரை மிகப்பெரிய வெற்றி பெற்றது இல்லை. இதற்கு உதாரணம் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதிலேயே நிற்கிறது.
இதைத்தவிர பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கப்படுமா என்ற சந்தேகத்தில் தான் உள்ளது. இதனால் ஏ ஆர் முருகதாஸ் நான்கு பக்கமும் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார். இதிலிருந்து எப்படி மீளப் போகிறார் என்பது கேள்விக்குறி தான்.